’ஆயிரத்தில் ஒருவன் to அசுரன்’ பத்தாண்டு நினைவுகளை பகிர்ந்த ஜி.வி. பிரகாஷ்
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 26, 2019 01:47 PM
புத்தாண்டு வருவதை முன்னிட்டு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது டிவிட்டர் கணக்கில் : இந்த அற்புதமான தசாப்தம் (பத்தாண்டுகள்) ’ஆயிரத்தில் ஒருவனி’ல் தொடங்கி ’அசுரனி’ல் முடிவடைந்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
வசந்தபாலன் இயக்கி 2006ம் ஆண்டு வெளியான வெயில் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். தொடர்ந்து இயக்குநர் விஜய் மற்றும் வெற்றிமாறனுடன் பணியாற்றிய அவருக்கு மதராசபட்டினம், பொல்லாதவன் உள்ளிட்ட படங்கள் பெரும் வரவேற்பை பெற்றுத்தந்தன.
வெற்றிமாறனின் பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்துள்ள அவர் இறுதியாக வெளியான அசுரனில் கொடுத்த பாடலும் இசையும் பெரும் வரவேற்பை பெற்றது.இதற்கிடையில் நடிப்பில் களமிறங்கிய ஜி.வி.பிரகாஷ் அதன்மூலமும் அபிமானம் பெற்று வருகிறார். இப்போது அவர் கைவசம் ஜெயில், ஐங்கரன் ஆகிய படங்கள் உள்ளன.
விஜய் இயக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்வை தழுவிய திரைப்படமான ‘தலைவி’ மற்றும் சூர்யா நடிக்கும் சூரரை போற்று ஆகிய படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
What a decade this has been ... started with 2010 Jan #aayirathiloruvan and ended with 2019 #asuran ... ❤️🙌 #aayirathiloruvan - #asuran
— G.V.Prakash Kumar (@gvprakash) December 26, 2019
And next year starts with #jail #sooraraipottru and #thalaivi 🔥🙌 #vasanthabalan #sudhakongra #alvijay @Suriya_offl #KanganaRanaut
— G.V.Prakash Kumar (@gvprakash) December 26, 2019