Beast Intro April 13
Beast Others
www.garudabazaar.com

ஜல்லிக்கட்டு காளையோடு சூர்யா… செம்ம மாஸ்ஸா புத்தாண்டு வாழ்த்து … வைரல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யா ஜல்லிக்கட்டு காளையோடு இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actor surya walking with a bull new year wish viral video

Also Read | ”எல்லா செண்டர்லயும் பீஸ்ட் கொண்டாட்டம்”… சன் பிக்சர்ஸ் பகிர்ந்த மாஸ் poster!

வாடிவாசல்…

சூர்யா – வெற்றிமாறன் – தாணு கூட்டணியில் வாடிவாசல் படம் பற்றிய அறிவிப்பு கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டது. அப்போது இருந்தே படத்துக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். ஆனால் இயக்குனர் வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தை இயக்கி வருவதாலும், சூர்யா இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகும் படத்தி கவனம் செலுத்தி வந்ததாலும் படப்பிடிப்பு தொடங்குவது தாமதமாகி வந்தது. ஆனால் இடையில் படம் பற்றிய அப்டேட்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த படம் சி சு செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்ற நாவலை தழுவி உருவாக உள்ளது.

Actor surya walking with a bull new year wish viral video

வாடிவாசல் ஒத்திகை…

சமீபத்தில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இந்த படத்தின் டெஸ்ட் ஷூட் நடத்தப்பட்டு, அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. இந்த படப்பிடிப்பின் போது சூர்யா, இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோர் கலந்துகொண்டனர். டெஸ்ட் ஷூட்டில் சூர்யா ஜல்லிக்கட்டு வீரராக இருக்கும் காட்சிகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த டெஸ்ட் ஷூட்டில் டாணாக்காரன் இயக்குனர் தமிழ், கருணாஸ் மற்றும் நடிகர் சூரி ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்த படத்தில் இயக்குனர் அமீர் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Actor surya walking with a bull new year wish viral video

காளைகளோடு பழகும் சூர்யா…

வாடிவாசல் படத்துக்காக நடிகர் சூர்யா கடந்த சில மாதங்களாக ஜல்லிக்கட்டு காளைகளோடு பழகி வருகிறார். இது சம்மந்தமாக அவ்வப்போது வெளியாகும் புகைப்படங்கள் இணையத்தில் கவனத்தை ஈர்த்தன. இந்நிலையில் நடிகர் சூர்யா தற்போது ஜல்லிக்கட்டு காளையோடு நடந்து சென்றுகொண்டே “இனிய புத்தாண்டு வாழ்த்துகள்” என்று கூறும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. விரைவில் வாடிவாசல் தொடங்க உள்ள நிலையில் சூர்யா காளையோடு நடக்கும் இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியுள்ளது.

Actor surya walking with a bull new year wish viral video

Also Read | "பேய் மாதிரி எடுத்துருக்காங்க"…"ஜூம் பண்ணிக் காட்டுங்க இன்னும் புல்லரிக்குது"… KGF 2 public review

தொடர்புடைய இணைப்புகள்

Actor surya walking with a bull new year wish viral video

People looking for online information on சூர்யா, ஜல்லிக்கட்டு காளை, Surya, Surya walking with bull, Surya wishes new year will find this news story useful.