Jai been others
www.garudabazaar.com

டிஸ்சார்ஜ் ஆன ரஜினி!.. “take care தலைவா..”.. கதறும் ரசிகர்கள்.. ஆரத்தி எடுத்து வரவேற்ற லதா..! Video

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

rajinikanth discharged returned from hospital chennai video

கடந்த 28-ஆம் தேதி உடல் நல குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து பேசியிருந்த அவரது மனைவி லதா ரஜினிகாந்த், “வழக்கமான மருத்துவ பரிசோதனை காரணமாக ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டிருந்தார்” என கூறி இருந்தார்.

இதனைத்தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்த ரஜினி விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என ரசிகர்களும், அரசியல் மற்றும் திரை பிரமுகர்களும் வலிமை மிக்க வார்த்தைகளை கூறி வந்தனர். இதனிடையே தமிழக முதல்வர் ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டு இருந்த மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரை சந்தித்து சிகிச்சைகுறித்து கேட்டறிந்ததுடன், நலம்பெற வேண்டி நல்வார்த்தைகளை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். அதன்படி மழை நேரத்தில் வீட்டுக்கு வந்த ரஜினிக்கு, வீட்டுக்குள் போகும் முன், லதா ரஜினிகாந்த், ஆரத்தி எடுத்து வரவேற்றார். அங்கு குழுமியிருந்த ரஜினி ரசிகர்கள், “டேக் கேர் தலைவா” என குரல் கொடுத்தனர்.

இதேபோல், தான் திரும்பி வந்ததை தனது மகள் சௌந்தர்யா விசாகன், அண்மையில் தொடங்கிய ஹூட் குரல்கருத்துப் பதிவு ஆப்பில் பதிந்துள்ள ரஜினி, வீட்டுக்கு திரும்பி வந்துவிட்டதாக ட்விட்டரில் கேப்ஷனுடன் பகிர்ந்துள்ளார். இந்த ஆப்பினை ரஜினியே முதல் முதலில் பேசி தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் 100 % இருக்கைகளுடன் வெளியாகவுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்திலான இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, வேல ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். 

டிஸ்சார்ஜ் ஆன ரஜினி!.. “TAKE CARE தலைவா..”.. கதறும் ரசிகர்கள்.. ஆரத்தி எடுத்து வரவேற்ற லதா..! VIDEO வீடியோ

rajinikanth discharged returned from hospital chennai video

People looking for online information on CauveryHospital, Rajini Health status, Rajini hospital, Rajinikanth, RajinikanthHealth will find this news story useful.