www.garudabazaar.com

"எந்த விமர்சனமா இருந்தாலும் நேரா சொல்லிடுவாங்க" - மனைவி குறித்து கௌதம் கார்த்திக் Exclusive

முகப்பு > சினிமா செய்திகள்

By |

A.R. Murugadoss production மற்றும் Purple Bull Entertainment நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் ஆகஸ்ட் 16, 1947 படத்தின் முதல் பார்வை வெளியானதிலிருந்தே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Gautham Karthik about manjia mohan amid August 16 1947 release

ரசிகர்கள் படம் குறித்த செய்திகளுக்காக ஆவலுடன் காத்திருந்தனர். அதன்பிறகு இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தில், இப்படத்தின்  தயாரிப்பாளர்கள் இப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசரை வெளியிட்டனர். கௌதம் கார்த்திக் மற்றும் அறிமுக நடிகை ரேவதி நடிப்பில், இந்திய சுதந்திர போராட்ட காலகட்டத்தில், ஒரு தொலைதூர கிராமத்தில் ஒருவன் பிரிட்டிஷ் படைகளுடன் போராடும் கதையை இப்படம் சொல்கிறது.

டிராமா, உணர்ச்சி மிகு தருணங்கள், காதல் மற்றும் பெரிய அளவிலான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இந்த டீசர், பார்வையாளர்கள் அனைவரிடத்திலும், தேசிய உணர்வு மற்றும் பெருமையுடன் அவர்களின் உணர்வுகளை தூண்டும் ஒரு சிலிர்ப்பான பயணத்தை தரும்படி அமைந்துள்ளது. Purple Bull Entertainment வழங்கும், A.R. Murugadoss production சார்பில், “ஆகஸ்ட் 16, 1947” படம் வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தின் புரொமோஷன் தொடர்பான சிறப்பு பேட்டியில் பிஹைண்ட்வுட்ஸில் பேசிய இப்படத்தின் ஹீரோ கௌதம் கார்த்திக், “மஞ்சிமா மோகன் எனக்கு நல்ல தோழி. அவர் சிறு வயதிலேயே மலையாள திரைப்படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். இன்றும் பட்டவர்த்தனமாக ஒரு திரைப்படத்தின் விமர்சனத்தை நேருக்கு நேராக சொல்லிவிடுவார். அது எனக்கு மிகவும் உதவியது; நாம் நடிக்கிறோம் என்பதை தாண்டி இப்போது ஹோம் என்விரான்மென்ட் என்று சொல்லக்கூடிய என்னுடைய பாதுகாப்பான சூழலை அவர் மிகவும் நல்லபடியாக உருவாக்கி தந்திருக்கிறார்.

நான் போடும் ஆடை முதற்கொண்டு அவர்தான் பார்த்துக் கொள்கிறார். எனக்கு இந்த படம் நடிக்கும்போது எந்த டென்ஷனும் இல்லாமல் இருக்கிறது. அவர் தான் என் லைஃப் பார்ட்னர், சிறந்த தோழி எல்லாமே.. நான் ஒரு விஷயம் ஃபோகஸ் செய்தால், அவர் பத்து விஷயம் செய்வார்” என நெகிழ்ச்சியுடன் பேசினார்.

கடல் (2012) திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானவர்,  நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக். அதனைத் தொடர்ந்து 'ரங்கூன்', 'முத்துராமலிங்கம்', 'தேவராட்டம்' போன்ற பல படங்களில் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். தற்போது 1947, பத்து தல ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

அதேபோல கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த  'அச்சம் என்பது மடமையடா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். இதனைத் தொடர்ந்து தமிழில் கௌதம் கார்த்திக் உடன் இவர் இணைந்து 'தேவராட்டம்', விஷ்ணு விஷாலின் 'எஃப்ஐஆர்' மற்றும் விஜய் சேதுபதியுடன் 'துக்ளக் தர்பார்' படங்களில் நடித்துள்ளார். இதனிடையே கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமணம் கடந்த ஆண்டு நடந்தது குறிப்பிடத்தக்கது.

"எந்த விமர்சனமா இருந்தாலும் நேரா சொல்லிடுவாங்க" - மனைவி குறித்து கௌதம் கார்த்திக் EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Gautham Karthik about manjia mohan amid August 16 1947 release

People looking for online information on AR Murugadoss, August 16 1947, Gautham Karthik will find this news story useful.