"ஆரியை மட்டும் தான் அப்படி பேசுவாங்க... ரம்யாவை எதிர்த்த கேபி.... செம டிரெண்ட் ஆகும் கேபி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் 90 நாட்களை கடந்து வெற்றிகரமாக இறுதிப் பயணத்தை போட்டியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் ஒவ்வொரு சீசனிலும் இறுதியாக நடைபெறும் Freeze டாஸ்க்கிற்காக ரசிகர்கள் காத்திருப்பது வழக்கம். அந்த வகையில் கடந்த வாரம் இந்த சீசனுக்கான Freeze டாஸ்க் நடைபெற்றது. அதேபோல் பாலாஜி மற்றும் ஆரி இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. ரம்யாவிற்கும் ஆரிக்கும் இடையே கூட கருத்து வேறுபாடுகள் அதிகரித்தது. இந்நிலையில் பாச மழைக்கு நிகராக வன்முறைகள் நிறைந்த வாரமாக அந்த வாரம் இருந்தது என்றே சொல்லலாம்.

gaby in twitter trending after open nomination செம டிரெண்ட் ஆகும் கேபி

இந்நிலையில் பிக்பாஸில் நேற்று ஓபன் நாமினேஷன் கொடுக்கப்பட்டது. அப்போதுகேபி கூறும்போது ரம்யா  மற்றும் பாலாவின் பெயரை கூறினார். அதற்காக காரணங்களாக "ரம்யா தனக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் வந்து கருத்தை முன்வைப்பார். ஆனால் அவற்றில் பெரும்பாலும் தனக்கு அப்போது உடன் இருப்பவர்களுக்காக தான பேசுவார். அதுவும் ஆரிக்கு விரோதமாக தான் இருக்கும். அதேபோல பாலா மற்றவர்களை பழி சொல்லி தான் கேம் விளையாடுகிறார். இது எனக்கும் நடந்துள்ளது" என்று தனது கருத்தைக் கூறினார். ஏற்கனவே பல ரசிகர்களும் இந்த கருத்தை ஒப்பு கொண்டிருப்பதால், பலரும் டிவிட்டர் தளத்தில் கேபியை வாழ்த்தி பதிவிட்டுள்ளனர். இந்நிலையில் அவர் டிவிட்டர் டிரெண்டிங்கில் உள்ளார்

"ஆரியை மட்டும் தான் அப்படி பேசுவாங்க... ரம்யாவை எதிர்த்த கேபி.... செம டிரெண்ட் ஆகும் கேபி..! வீடியோ

Tags : Ramya, Gaby

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

gaby in twitter trending after open nomination செம டிரெண்ட் ஆகும் கேபி

People looking for online information on Gaby, Ramya will find this news story useful.