Reliable Software
www.garudabazaar.com

பாண்டு, கோமகனைத் தொடர்ந்து மற்றுமொரு பிரபலம் மரணம்... மீளா சோகத்தில் திரையுலகம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திரைத்துறையில் பரவலாக அறியப் படுபவரான நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் பாண்டு இன்று அதிகாலை மரணமடைந்தார்.

following pandu komagan oru thalai raagam producer passes away

பாண்டுவுக்கு கொரோனா தொற்று இருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல் பாண்டுவின் மனைவி சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். பாண்டுவின் மறைவு குறித்து அவருடைய மகன்கள் உருக்கமாக பேசியுள்ளனர்.  இதேபோல் திரையுலகில் அடுத்தடுத்து இவ்வாறு நிகழும் கலைஞர்கள் உயிரிழப்பு பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் பொதுமக்களிடையே ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக திரையுலகத்தினர் பலரும் இந்த மீளா சோகத்தில் வாடி வருகின்றனர்.

ALSO READ: "ADMK logo பண்ண சொல்லி எம்ஜிஆர் கேட்டார்".. மறைந்த பாண்டுவின் மறுபக்கம்.. Throwback interview!

இதனிடையே 2004ஆம் ஆண்டு சேரன் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராஃப் திரைப்படத்தில் ஒவ்வொரு பூக்களுமே பாடலில் சினேகாவுடன் இணைந்து பாடுவது போல் பாடி நடித்திருப்பார் கோமகன். பிரபல பார்வை மாற்றுத்திறனாளி பாடகரான இவர் இசைக்குழு ஒன்றை நடத்தி வந்தார். இவர் இன்றைய தினம் கொரோனாவால் மரணம் அடைந்திருக்கிறார்.  இவரது மறைவு குறித்து சேரன் மற்றும் சினேகா உள்ளிட்டோர் உருக்கமான பதிவுகளை பகிர்ந்து இருக்கின்றனர். தொடர்ந்து திரைஉலகம் இவர்களுக்கு இரங்கலை தெரிவித்து வருகிறது.

following pandu komagan oru thalai raagam producer passes away

இதனிடையே மற்றுமொரு அதிர்ச்சி தகவலாக ஒரு தலை ராகம் திரைப்படத்தினை தயாரித்து இயக்கியவரான இ.எம்.இப்ரஹிம் உயிரிழந்துள்ளார். இந்த படத்தின் கதை வசனத்தை எழுதி, இசையமைத்த டி.ராஜேந்தரும், தயாரிப்பாளர் இப்ரஹீமும் இப்படத்தினை மாறி மாறி இயக்கியிருந்ததால், இப்படத்தில் டி.ராஜேந்தர் பெயர் இசை, பாடல்களில் மட்டுமே இடம் பெற்றிருந்தது. இப்ரஹீமின் பெயரே இயக்குநர் பெயராக இடம் பெற்றிருந்தது. டி.ராஜேந்தர் பெயர் ஓரமாக இடம் பெற்றிருந்தது. எனினும் தனக்கு வாழ்வளித்தவர் என இவரை பற்றி நன்றியுடன் அடிக்கடி கூறும் டி.ராஜேந்தர் இவருக்கு கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்துள்ளார்.

ALSO READ: ஆட்டோகிராஃப் 'ஒவ்வொரு பூக்களுமே' புகழ் கோமகன் மரணம்!... சினேகா பகிர்ந்த கண்கலங்க வைக்கும் பதிவு!

தொடர்புடைய இணைப்புகள்

following pandu komagan oru thalai raagam producer passes away

People looking for online information on E M Ibrahim, Mansoor Creations, Oru Thalai Raagam, RIP, RIPKomagan, RIPPandu, T rajender will find this news story useful.