Reliable Software
www.garudabazaar.com

தந்தையின் திடீர் மரணம்.. சோகத்தில் ஆழ்ந்த, 'அஜித்தின்' முதல் பட 'இயக்குநர்' குடும்பம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல டைரக்டர் செல்வா தந்தை பக்தவச்சலம், வயது 85, இன்று காலை 7.15 மணியளவில் காலமானார். 

Ajith first feature Amaravathi director selva lost his father

DD பொதிகை டிவியில் பரபரப்பாக பேசப்பட்ட நீலா மாலா , சித்திரபாவை தொடர்களை இயக்கியவர் டைரக்டர் செல்வா. இவர் இயக்கிய முதல் திரைப்படம் தலைவாசல். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. பின்னர் அஜித்குமாரை ஹீரோவாக அறிமுகப் படுத்தி அமராவதி திரைப்படத்தை இயக்கினார். அஜித் குமார் அமராவதிக்கு முன்னர் சில படங்களில் நடித்திருந்தாலும் அஜித் முழுமையான ஹீரோவாக நடித்து வெளியான முதல் படம் அமராவதி. 

அதன்பிறகு கர்ணா, புதையல், பூவேலி, உன்னருகே நானிருந்தால், ஜேம்ஸ்பாண்டு, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், நான் அவனில்லை, தோட்டா போன்ற வெற்றிப் படங்களான 25 படங்களுக்கு மேல் செல்வா டைரக்ட் செய்துள்ளார். இப்போது அரவிந்த் சாமி நடிக்கும் வணங்காமுடி படத்தை இயக்கி முடித்துள்ளார். இவரது தந்தை தான் பக்தவச்சலம்.

பக்தவச்சலம் அவர்கள் கொரோனா தொற்று காரணமாக சென்னை பெரம்பூர் தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப் பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவரது மறைவு செல்வா மற்றும் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

ALSO READ: அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. நகைச்சுவை நடிகர் பாண்டு மரணம்.. கண்ணீரில் திரையுலகம்!

Ajith first feature Amaravathi director selva lost his father

People looking for online information on Director, Selva, Seva, ThalaAjith will find this news story useful.