www.garudabazaar.com

But உங்க நேர்மை 'எங்களுக்கு' புடிச்சிருக்கு... பாராட்டும் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சொல்லாமல் கொள்ளாமல் கிளாஸ் டீச்சர் டெஸ்ட் வைப்பது போல நேற்று பிக்பாஸ் ஒரு டாஸ்கை வெகு சீக்ரெட் ஆக நடத்தினார். முதலில் ரமேஷை அழைத்த அவர் வீட்டுக்கு வந்து 60 நாட்களில் என்ன செய்தீர்கள்? என கேட்டார். அநேகமாக ரமேஷ் மிகவும் நீளமாக பேசியது இதுதான் முதல்முறையாக இருக்கும். அடுத்து சிக்கியது ஆஜீத். பாட்டு பாடியதை தவிர வேறு எதுவும் அவரால் சொல்ல முடியவில்லை. கேப்ரியலாவுக்கு இதே நிலை தான்.

Finally Shivani Narayanan told the truth in Bigg Boss House

அழுகாத குறையாக வெளியில் வந்தார். அடுத்து சிக்கியது ஷிவானி. அவரும் டான்ஸ் ஆடியதை எல்லாம் சொல்லியும் பிக்பாஸ் அசரவில்லை. கடைசியில் நான் எதுவும் பண்ணல பிக்பாஸ் என அப்ரூவராக மாறிவிட்டார். ரமேஷ், ரம்யா பாண்டியன், நிஷா, ஆஜீத், சோம் மற்றும் கேப்ரியலா என அனைவரும் ஏதோதோ சொல்லி திசைதிருப்ப முயன்றனர். ஆனால் ஷிவானி அதுபோல எதுவும் செய்யவில்லை.

இதைப்பார்த்த ரசிகர்கள் மற்றவர்கள் அனைவரும் டான்ஸ் ஆடியது, நேர்த்தியாக உடை உடுத்தியது, பாடியது, காமெடி செய்தது என பலதையும் சொல்லி சமாளித்தனர். ஆனால் ஷிவானி இந்த விஷயத்தில் வளவளவென எதுவும் சொல்லி சமாளிக்கவில்லை. நேர்மையாக நான் எதுவும் செய்யவில்லை என பிக்பாஸிடமே ஒப்புக்கொண்டு விட்டார். இந்த விஷயத்தில் அவரை பாராட்டியே ஆக வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Finally Shivani Narayanan told the truth in Bigg Boss House

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.