www.garudabazaar.com

'அந்த' ஷோவுக்கு நாங்க கூட... இவ்ளோ 'வெளம்பரம்' பண்ணல!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று போட்டியாளர்களை தனியாக அழைத்த பிக்பாஸ் இந்த 60 நாட்களில் நீங்கள் செய்தது என்ன? என கேள்வி கேட்டு வறுத்தெடுத்து விட்டார். இதுகுறித்து முன்பே அறிவிக்காமல் போனதாலும், வெளியில் யாரிடமும் கலந்துரையாட கூடாது என்றதாலும் பிறருக்கும் இதுகுறித்து தெரியாமல் போய் விட்டது. அதிலும் உள்ளே சென்று வந்தவர்கள் கொரோனா டெஸ்ட் செய்தார்கள் என்று கூற, பிறரும் அதை நம்பிக்கொண்டு திரிந்தது தனிக்கதை.

Again and again Somasekhar is telling the Same Story

சோமை அழைத்த பிக்பாஸ் அவரே நொந்து போயிருப்பார். ஏனெனில் 2010-ம் ஆண்டு அழகிய தமிழ் மகன் ஷோ குறித்து பேச ஆரம்பித்து விட்டார். இல்லை சோம் நீங்க என்ன பண்ணீங்க என பிக்பாஸ் கேட்க தன்னுடைய திக்குவாய், குடும்பம், ரசிகர்கள் என சோம் சம்மந்தம் இல்லாமல் உளறிக்கொட்டி கிளறி மூடினார். மேலும் ரசிகர்களுக்கு டிப்ஸ் கொடுக்கவும் ஆரம்பித்து விட்டார். இதைப்பார்த்த பிக்பாஸ் மீண்டும் அதுக்கு தனியா டாஸ்க் கொடுப்போம் என செஞ்சு விட, ஒருவழியாக தப்பித்தோம் பிழைத்தோம் என வெளியில் வந்தார்.

வெளியில் வந்தும் கொரோனா டெஸ்ட் அது, இது என கதைவிட்டு ரியோவுக்கு பீதியை கிளப்பினார். இதைக்கேட்ட மற்ற போட்டியாளர்கள் பிளட் டெஸ்ட் எடுத்தாங்களா? என சீரியஸாக விசாரிக்க ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில் சோமை ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். நிகழ்ச்சியில் அவர் ஏகப்பட்ட முறை அழகிய தமிழ் மகன் நிகழ்ச்சி குறித்து பேசிவிட்டதால், அந்த ஷோவுக்கு விஜய் டிவி கூட அவ்வளவு விளம்பரம் செஞ்சுருக்க மாட்டாங்க. என மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Again and again Somasekhar is telling the Same Story

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.