Reliable Software
www.garudabazaar.com

"இன்னும் எத்தன பேர இழக்க போறோமோ!!".. அருண்ராஜா காமராஜ் மனைவி மறைவு.. திரைத்துறையினர் இரங்கல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா கொரோனா தொற்றால் இன்று மரணம் அடைந்துள்ளதை அடுத்து அவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

film people condolence arunraja kamaraj wife demise

இதுபற்றி கூறியுள்ள இயக்குநர் அட்லீயின் மனைவி ப்ரியா அட்லீ, “இதை ஜீரணிக்கவே முடியவில்லை. இன்னும் எத்தனை பேரின் வாழ்வை நாம் இப்படி சீக்கிரமே இழக்கப் போகிறோம்.

சிந்து உங்களின் ஆன்மா சாந்தி பெறட்டும். அருண்ராஜா காமராஜ் திடமாக இருங்கள். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இது கடினமான ஒன்று வலிமையுடன் இருங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் அருண்ராஜா காமராஜின் இயக்கத்தில் கனா படத்தின் நாயகியாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், “சிந்து” என பதிவிட்டு இதயம் நொறுங்கிப் போகும் குறியீடுகளை பதிவிட்டுள்ளார்.

இதேபோல் மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தமது ட்விட்டர் பக்கத்தில், “வெற்றியை மாலையாக சூடிக் கொள்ளும்போது மிக நேர்மையாக மகிழ்வது இணையாள் மட்டுமே. அருண்ராஜா காமராஜ் உங்களின் அடுத்தகட்ட நகர்வைப் பார்த்து ரசிக்க இயலாமல், அவர்கள் கடந்து போய்விட்ட துயரம் எவ்வளவு மோசமானதென அறிவேன். மீண்டு வர இறைவன் பலத்தை தரட்டும். ஆறுதல்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து நகைச்சுவை நடிகர் சதீஷ், “அவர்கள் காதலிக்கும் பொழுதிலிருந்தே நல்ல பழக்கம். மிக நல்ல பெண்... மிக நல்ல Pair... ஈடு செய்ய முடியாத இழப்பு அருண்ராஜா. Stay strong Miss u sister” என்று உருக்கமாக ட்வீட் பதிவிட்டுள்ளார்.

ALSO READ: 'பெரும் சோகம்'!.. அதிர்ச்சியை ஏற்படுத்திய "அசுரன், புதுப்பேட்டை" பட நடிகரின் மரணம்!

film people condolence arunraja kamaraj wife demise

People looking for online information on Arunraja Kamaraj, Sathish will find this news story useful.