www.garudabazaar.com

"100 தடவை விழுந்தேன்!.. விட்டுட்டு போய்டலானு நெனைச்சேன்!".. "இது ஆரம்பம் தான்".. சமந்தா! Skiing Video

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Samantha: நடிகை சமந்தா அண்மைக் காலங்களில் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார்.

Fell a 100 times actress Samantha skiing viral post video சமந்தா

புஷ்பா பட பாடல்

தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகையாக இருக்கும் சமந்தா, கடைசியாக அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தன்னா நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் இடம் பெற்ற ஓ சொல்றியா பாடலில் நடனம் ஆடி இருந்தார். இந்தப் பாடலில் நடனம் ஆடியதன் மூலம் சமந்தா அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

கோவா ட்ரிப்

அண்மையில் நடிகை சமந்தா கோவாவுக்கு சென்று இருந்தார். அங்கு பனிச்சறுக்கு விளையாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தம்முடைய இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள்   அவருடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து, அவற்றுக்கு பாசிடிவான பல கமெண்டுகளை பதிவிட்டும் வருகின்றனர்.

நூறு தடவை நான் விழுந்தேன்.. 

இது தொடர்பாக சமந்தா, “நூறு தடவை நான் விழுந்தாலும் மறுபடியும் நான் எழுந்து வருவேன். இவை எல்லாவற்றையும் தாண்டி விட்டு விட்டுப் போய்விடலாம் என்றுகூட நினைத்திருக்கிறேன்.” என்று நடிகை சமந்தா தம்முடைய சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கக்கூடிய பதிவு தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

ஆம், இந்த பனிச்சறுக்கு பற்றி தான் நடிகை சமந்தா பேசியிருக்கிறார். இது தொடர்பான அந்த பதிவில், “இந்த பயணத்தை நான் எப்படி தொடங்கினேன் தெரியுமா? ஒரு சறுக்கலில் ஒரு குழந்தையை விட்டால் எப்படி அது விளையாடுமோ.. அப்படித்தான் இந்த பயணத்தை தொடங்கினேன். இருந்தாலும் மறுபடி மிகவும் பணிவாக தொடங்கிய இந்த பனிச்சறுக்கில் நான் ஒரு நூறு தடவை விழுந்து விட்டேன். அப்படி நூறு தடவை விழுந்தாலும், மீண்டும் மீண்டும் எழுந்தேன்.

விட்டுட்டு போய்டலாம்னு நெனைச்சேன்

ஒரு கட்டத்தில் விட்டுவிட்டு போய் விடலாமா என்று கூட நினைத்தேன். ஆனால் நான் அதை விடவில்லை. மீண்டும் மீண்டும் பயணத்தை தொடர்ந்து கொண்டே இருந்தேன். இப்போது நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நல்ல வேளை.. நான் அதை விட்டுவிடவில்லை. இதுபோன்ற ஒரு பொழுதுபோக்கை தொடங்கும்போது நாம் தொடக்கத்தில் பழகாமல் இருப்போம்.

ஒரு சைக்கிள் ஓட்டுவது போன்றதுதான். சைக்கிள் ஓட்டப் பழகும்போது விழுந்து விழுந்து எழுவோம். ஆனால் அதன்பிறகு மிகவும் இயல்பாக பழகிவிடும். அப்படி விழும்போது தான் கற்றுக் கொள்ளவும் முடியும் என்பது போல்தான் இதுவும். எதுவுமே தெரியாமல் நான் இந்த பயணத்தை தொடங்கினேன். ஆனால் இப்போது ஸ்பெஷலாக உணர்கிறேன்!” என்று குறிப்பிடுகிறார்.

இதெல்லாம் வெறும் ஆரம்பம் தான்

அத்துடன் இந்த பனிச் சறுக்கிற்காக தனக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளருடனும் புகைப்படம் எடுத்து நடிகை சமந்தா பகிர்ந்திருக்கிறார். அவர் குறித்து பேசும்போது நடிகை சமந்தா, “இவர்தான் எனக்கு பயிற்சி அளித்தார். நான் இந்த பயணத்தை நிறைவாய் முடிப்பதற்கு இவர் முக்கியமான காரணம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதெல்லாம் வெறும் ஆரம்பம் தான் என்றும் நடிகை சமந்தா அந்த பதிவின் முடிவில் குறிப்பிட்டிருக்கிறார். நடிகை சமந்தா நடிப்பில் தொடர்ந்து யசோதா உள்ளிட்ட திரைப்படங்கள் லைன் அப்பில் இருக்கின்றன. இதேபோல் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் சமந்தா ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

"100 தடவை விழுந்தேன்!.. விட்டுட்டு போய்டலானு நெனைச்சேன்!".. "இது ஆரம்பம் தான்".. சமந்தா! SKIING VIDEO வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Fell a 100 times actress Samantha skiing viral post video சமந்தா

People looking for online information on Samantha, Samantha ruth prabhu will find this news story useful.