www.garudabazaar.com

“எனக்கு மட்டும் ஏன் சொல்லித் தர மாட்றீங்க” - இளையராஜாவிடம் கேள்வி கேட்ட கார்த்திக் ராஜா.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இசையமைப்பாளர் மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜாயின் மூத்த மகன் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா. இவரும் பல முன்னணி இயக்குநர்களின் பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள இவர், அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பிலான பிசாசு - 2 படத்துக்கு இசையமைத்துள்ளார்.

father Illaiyaraaja wont teach his nuances says Karthik Raja

Also Read | 11 வருஷத்துக்கு பின் சொந்த மண்ணில் இசை நிகழ்ச்சி.. எதிர்பார்ப்பில் யுவன் ரசிகர்கள்.!

வரும் ஆகஸ்டு 31-ஆம் தேதி நேரடியாக திரையரங்குகளில் இந்த படம் வெளியாகவுள்ள நிலையில், திருச்சியில் வரும் செப்டம்பர், 24ம் தேதி "பொன்மாலை பொழுது" என்கிற இசை நிகழ்ச்சியை கார்த்திக் ராஜா நடத்த உள்ளார். இது தொடர்பாக, திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக் ராஜா நிறைய விஷயங்களை பேசியுள்ளார். அதில், “கோலாலம்பூரில் ஏற்கனவே ஒரு இசை நிகழ்ச்சி நடத்தினேன். மதுரையிலும் சங்கீத திருவிழா என்கிற பெயரில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளேன். தற்பொழுது திருச்சியில் முதல் முறை மிகப்பிரமாண்ட இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளேன். இந்நிகழ்வில் 15 ஆயிரம் ரசிகர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

father Illaiyaraaja wont teach his nuances says Karthik Raja

இந்த நிகழ்ச்சியில், அப்பா (இளையராஜா) மற்றும் நான் இசையமைத்த திரையிசைப் பாடல்கள் இசைக்கவுள்ளோம். ஹரிஹரன், சாதனா சர்கம் உள்ளிட்ட இந்திய இசைக் கலைஞர்கள் பங்கேற்றாலும் இந்நிகழ்ச்சியில் தமிழ்ப் பாடல்கள் பாடப்படும். இந்தி பாடல்கள் பாடப்படாது. அப்பா போல வெளிநாட்டு கலைஞர்களை பயன்படுத்தாமல், உள்ளூர் கலைஞர்களை வைத்தே அதே தரத்துடன் வழங்கவுள்ளேன். முன்னதாக இப்படி வெளிநாட்டு கலைஞர்களை வைத்து அப்பா நிகழ்ச்சி நடத்தும் பொழுது நடக்கும் ரிகர்சல் பொறுப்பை அப்பா என்னிடம் கொடுப்பார். அப்போது அவர்களிடம் இருந்து பல நுணுக்கங்களை கற்றிருக்கிறேன். அதை பயன்படுத்தி இந்நிகழ்ச்சியில் கலைஞர்களை பாடவைப்பேன். அப்பாவை பொறுத்தவரை அவர் இசை நுணுக்கங்கள் எனக்கு கற்றுத் தரமாட்டார். நானே கேட்பேன், ‘எல்லாருக்கும் சொல்லித் தருகிறீர்கள். எனக்கு மட்டும் ஏன் கற்றுத்தர மாட்டீர்கள்?’ என்று ..

father Illaiyaraaja wont teach his nuances says Karthik Raja

அதற்கு அவரோ,  ‘நீ கற்பூரம் போல் டக்கென கற்றுக்கொள்வதுடன், கற்றதில் இருந்து நீ என்னிடமே கேள்விகளை கேட்கிறாய்!’ என்பார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்காதது பற்றிய பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த கார்த்திக் ராஜா, “யாருக்கு என்ன கிடைக்கும் நடக்கும் கொடுக்க வேண்டும் என்பது கடவுளின் முடிவுபடி நடக்கும்.  இப்பொழுது திருச்சியில் நான் நிகழ்ச்சி நடத்துவது கடவுளின் விருப்பமாக இருக்கிறது. நான் அதை செய்கிறேன். தொடர்ந்து நான் எனது வேலையை செய்து கொண்டே இருப்பேன். தற்போது, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சுமார் 12 திரைப்படங்களுக்கு இசையமைத்துக்கொண்டு வருகிறேன்” என்றார்.

Also Read | Kamaal R Khan: பிரபல பாலிவுட் நடிகர் கமால் R கான் பரபரப்பு கைது.! 2020-ல் போட்ட ட்வீட் தான் காரணமா?

தொடர்புடைய இணைப்புகள்

father Illaiyaraaja wont teach his nuances says Karthik Raja

People looking for online information on Illaiyaraaja, Karthik Raja, Pisasu 2, Yuvan Shankar Raja will find this news story useful.