www.garudabazaar.com

'இதுக்கு பேரு தான் கர்மாவா?'... சம்யுக்தாவிற்கு குறும்படம் போடும் ரசிகர்கள்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நாமினேஷனில் சனம், அனிதா, ஆரி, பாலா, ரமேஷ், சோம், நிஷா போன்றோர் தேர்வு பெற்றனர். நாமினேஷன் முடிந்தபிறகு சம்யுக்தா கூறும்பொழுது "இந்த வாரம் சனம் அல்லது அனிதா ஒருவர் வெளியேற வேண்டும்" என்பது போல் கடுமையாகப் பேசியுள்ளார். ஆனால் அதன் பிறகு நடந்த டாஸ்கில் அனிதா வென்றதை அடுத்து, அவர் வீட்டில் இருக்கும் யாரேனும் ஒருவரை நாமினேட் செய்ய வேண்டும் என்பது போல் பிக்பாஸ் அறிவித்தார்.

fans play kurumpadam for samyuktha சம்யுக்தாவிற்கு குறும்படம் போடும் ரசிகர்கள்

இந்நிலையில் அனிதா உடனே சம்யுக்தாவை நாமினேட் செய்கிறார். பின்பு இதை அவரிடம் வந்து கூறும்பொழுது சம்யுக்தாவின் முகமே வாடி விடுகிறது. மேலும் அனிதா வரும்போது "வேட்டையாடவே வெறியோடு நிக்குறான்" என்னும் பேட்ட பட பாடலை பாடி கொண்டே வருகிறார். இந்த வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது போல் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. அதே போல் அனிதா"அனைவருக்கும் திருப்பிக்கொடுக்க நான் இங்கே இருக்க வேண்டும்" என்பதுபோல் கூறுகிறார். இந்நிலையில் வரும் காலங்களில் அனிதா வெறியுடன் விளையாடுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

fans play kurumpadam for samyuktha சம்யுக்தாவிற்கு குறும்படம் போடும் ரசிகர்கள்

People looking for online information on Anitha, Biggboss, Samyuktha will find this news story useful.