ET Others
www.garudabazaar.com

வலிமை படம் பார்த்த ஷாலினி அஜித்… ரசிகர் ஒருவரின் வித்தியாசமான கோரிக்கை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வலிமை படம் பார்க்க வந்த ஷாலினி படம் முடிந்து வெளியேறும் போது ரசிகர் அவரிடம் வைத்த கோரிக்கை வீடியோ வைரலாகியுள்ளது.

Fan request to valimai watched shalini regarding ajith

இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் படம்:

அஜித் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின. அதன் பின்னர் அஜித்-வினோத்-போனி கபூர் கூட்டணியில்  வலிமை திரைப்படம் தொடங்கப்பட்டது. ஆனால் கோவிட் பிரச்சனை காரணமாக 2022 ஆம் ஆண்டுதான் வலிமை படம் ரிலிஸானது. அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, ஜி எம் சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, பின்னணி இசையை ஜிப்ரானும், பாடல்களுக்கான இசையை யுவன் ஷங்கர் ராஜா உருவாக்கி இருந்தனர். அனு வர்தன் ஆடை வடிவமைப்பாளராகவும், சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் ஆகியோரும் பணியாற்றி இருந்தார்கள்.

Fan request to valimai watched shalini regarding ajith

ரசிகர்களின் காத்திருப்பு:

2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று 4 மொழிகளில் ஒரே நாளில் ரிலிசானது உள்ளது வலிமை. இரண்டு வருடங்களுக்கு மேல் காத்திருந்த ரசிகர்கள் படத்தை திரையரங்கில் கொண்டாடி தீர்த்தனர்.  படம் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் இன்னமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மீண்டும் இணையும் கூட்டணி:

வலிமை படத்துக்கு பிறகு மீண்டும் ஒருமுறை அஜித்-வினோத்- போனி கபூர் கூட்டணி இணைய உள்ளது. இந்த படத்துக்கு இப்போது தற்காலிகமாக அஜித் 61 என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஒரு முக்கியமான சமூகப் பிரச்சனையைப் பேசப்போவதாக ஹெச் வினோத் கூறியுள்ளார். இதனால் இந்த படத்தின் மீதான் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது, சமீபத்தில் காதில் கடுக்கன், நீண்ட தாடி, ஒட்ட வெட்டிய முடி என அஜித்தின் வித்தியாசமான தோற்றத்தோடு புகைப்படம் வெளியானது. அந்த இந்த படத்துக்கான கெட்டப்பாக இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Fan request to valimai watched shalini regarding ajith

வலிமை படம் பார்த்த ஷாலினி:

இந்நிலையில் வலிமை படத்தை திரையரங்கில் கண்டு களித்தார் அஜித்தின் மனைபியும் முன்னாள் நடிகையுமான ஷாலினி. அவர் படம் முடிந்து வெளியேறும் போது வீடியோ எடுத்த ஒரு ரசிகர் ‘மேடம். அஜித் சார்ர கேட்டதா சொல்லுங்க’ என உற்சாகத்தில் கூறுகிறார். ஷாலினி அவரை பார்த்து ‘ஓகே’ என்பது போல கையைக் காட்டுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Fan request to valimai watched shalini regarding ajith

People looking for online information on Shalini Ajith, Valimai will find this news story useful.