Valimai BWE
www.garudabazaar.com

Valimai: "என் ஜார்ஜ் க்ளூனி தல.. உனக்கும் மட்டும்தான் இப்படி..".. ‘வலிமை’ அஜித்க்கு குஷ்பு வாழ்த்து!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 25, பிப்ரவரி 2022: தமிழ் சினிமா முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித் குமார். இவருடைய நடிப்பில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த திரைப்படம் வலிமை. இந்த படம் தற்போது பிப்ரவர்ரி 24-ஆம் தேதி ரிலீசாகி இருக்கிறது.

my george clooney thala khshbu wishes ajith valimai வலிமை

வலிமை

சதுரங்க வேட்டை, தீரன் திரைப்படங்களைத் தொடர்ந்து, போனி கபூரின் தயாரிப்பில், அஜித் நடிப்பில் உருவான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்கினார். இவர் மீண்டும் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தையும் போனி கபூரே தயாரித்துள்ளார்.

அஜித் மற்றும் நடிகர்கள்.. மாஸ்

ஹூமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு, புகழ் உட்பட பலர்கள் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தில் ஆக்சன் காட்சிகளில் அஜித்துடன் இணைந்து ஹூமா குரேஷி மாஸ் காட்டியிருக்கிறார். அதிலும் அஜித் இடம் பெறும் அந்த பஸ் ஃபைட் படு மாஸாக வந்திருப்பதற்காக ரசிகர்கள் தொடர் பாராட்டுக்களை குவித்து வருகின்றனர்.

குவியும் வாழ்த்துக்கள்..

‘வலிமை’ படத்தை திரை உலக பிரபலங்களும் ரசிகர்களும் பாராட்டி வரும் நிலையில் பலரும் தங்களது வாழ்த்துக்களை அஜித்துக்கும், வலிமை படக் குழுவினர்களுக்கும் கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகை குஷ்பு தற்போது வலிமை படம் குறித்து, கருத்து தெரிவித்துள்ளார்.

என் ஜார்ஜ் க்ளூனி தல..

அதில் அவர், ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி பெயரை குறிப்பிட்டு,  “என் ஜார்ஜ் க்ளூனி தல!..  உனக்கு மட்டும் தான் இப்படி கூட்டம் வருது!!” என பதிவிட்டு, வலிமை படக்குழுவினரான அஜித், போனிகபூர், வினோத் மற்றும் படத்தின் மொத்த குழுவினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக , “மை டார்லிங் ஹூமா குரேஷி, நீ படத்தில் ஃபேபுலஸாக இருப்பதாக அறிந்தேன், வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார். குஷ்புவின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

Also Read: "ட்ரிம் செய்யப்பட்ட வலிமை படத்தின் நீளம்" .. இப்போ Duration எவ்வளவு தெரியுமா?

தொடர்புடைய இணைப்புகள்

my george clooney thala khshbu wishes ajith valimai வலிமை

People looking for online information on Ajith, Bayview Projects, Boney kapoor, H Vinoth, Huma Qureshi, Kushboo Sundar, Kushbu, Valimai, Yuvan Shankar Raja will find this news story useful.