Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

“காலையில 5 மணிக்கே அலாரம் வெச்சு..”.. புலம்பித் தள்ளிய கணவர்.. ஆரிக்கு இப்படி ஒரு ரசிகையா? ViralVideo

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் சீசன் 4-ல் டைட்டில் வென்றதன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் ஆரி.

Excited girl fan of aari Trending Video ஆரியை சந்தித்த ரசிகை

முன்னதாக மாலைப்பொழுதின் மயக்கத்திலே, நெடுஞ்சாலை மூலம் நடிப்புத்துறையில் ஆரி காலூன்றியிருந்தாலும், அவற்றில் சில்லுனு ஒரு காதல் திரைப்பட இயக்குநர் கிருஷ்ணாவின் இயக்கத்தில் வெளிவந்த நெடுஞ்சாலை திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் ஆரிக்கு பிக்பாஸ் அளித்த வெளிச்சம் அவரை இன்னும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் சென்றுள்ளது என சொல்லலாம்.

அதேபோல் மக்கள் இல்லாமல் நான் இல்லை என்று தொடர்ந்து முழங்கிக் கொண்டும், மக்களிடம் தொடர்ச்சியாக பேசிக்கொண்டும் வரும் ஆரி, பல்வேறு கட்டங்களிலும் சமூக நலன்களில் அக்கறை கொண்டு குரல் கொடுத்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் வென்றதற்கு பின்னர் தமது ரசிகர்களை தொடர்ச்சியாக சந்தித்துவருகிறார் ஆரி.

இந்நிலையில் ஆரியின் ரசிகை ஒருவர், ஆரியை சந்திக்க வேண்டும் என்று காலை 5 மணிக்கே அலாரம் வைத்து செஞ்சிக்கோட்டை சென்று சந்தித்து பேசியுள்ளார். சூர்யா எனும் அந்த ரசிகையை அவரது கணவர் ஆரியை சந்திக்க அழைத்து வந்துள்ளார். பகவான் திரைப்பட ஷூட்டிங்கில் ஆரி இருந்தபோதுதான் அவரது ரசிகை அவரை சென்று சந்தித்துள்ளார். சூர்யாவின் கணவர் தான் நடந்ததை ஆரியிடம் செம்ம ஜாலியாக விளக்குகிறார்.

இந்த வீடியோவை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஆரி,  “சூர்யா போன்ற தங்கைகள் கிடைத்தது என் பாக்கியம். என்னைக் கொண்டாடிய என் தங்கைகளை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி ❤ இந்த சந்திப்பை ஏற்படுத்திக் கொடுத்த சூர்யாவின் கணவருக்கும், குடும்பத்தாருக்கும் என் நன்றிகள்” என பதிவிட்டுள்ளார்.

ALSO READ: “புகழ் இப்படி பண்ணாருனா.. யாருக்கு தான் Crush வராது?”.. குக் வித் கோமாளி நடிகை Live Video!

“காலையில 5 மணிக்கே அலாரம் வெச்சு..”.. புலம்பித் தள்ளிய கணவர்.. ஆரிக்கு இப்படி ஒரு ரசிகையா? VIRALVIDEO வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Excited girl fan of aari Trending Video ஆரியை சந்தித்த ரசிகை

People looking for online information on Aari, Biggboss, Fan, Trending, Viral will find this news story useful.