www.garudabazaar.com

மீண்டும் இணைகிறதா ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் ‘ஹிட்’ கூட்டணி?.. ஹீரோ இவரா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2011-ல் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் M.சரவணன் இயக்கத்தில் வெளியான திரைப்படம்  ‘எங்கேயும் எப்போதும்’.

engeyuym eppothum saravanan Murugadoss combo sundeep kishan lead

மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த இந்த திரைப்படத்தில் ஜெய், அனன்யா, ஷர்வன், அஞ்சலி உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்துக்கு சி.சத்யா இசையமைத்திருந்தார்.

engeyuym eppothum saravanan Murugadoss combo sundeep kishan lead

இதனைத் தொடர்ந்து இயக்குனர் M.சரவணன், விக்ரம் பிரபு நடிப்பில் ‘இவன் வேற மாதிரி’ திரைப்படத்தையும், ஜெய் நடிப்பில் வலியவன் திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். இந்த படங்களை அடுத்து தற்போது M.சரவணன் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிய வந்துள்ளன.

தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாநகரம், சுசீந்திரன் இயக்கத்தில் நெஞ்சில் துணிவிருந்தால், தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கத்தில் மாயவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் சந்தீப் கிஷன். இந்நிலையில் தான் இயக்குனர் M.சரவணன் தமது அடுத்த படத்தில் சந்தீப் கிஷனை இயக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

engeyuym eppothum saravanan Murugadoss combo sundeep kishan lead

இந்த படத்துக்காக, இயக்குனர் M.சரவணன் மீண்டும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணையவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கிடைத்து இருக்கின்றன. எனினும் இந்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ: பிரபல சீரியல் நாயகியுடன் கவிஞர் சினேகனுக்கு டும் டும் டும்!! இணையத்தில் Viral ஆகும் பொண்ணு - மாப்பிள்ளையின் அசத்தல் ஃபோட்டோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

engeyuym eppothum saravanan Murugadoss combo sundeep kishan lead

People looking for online information on Ananya, Anjali, AR Murugadoss, Engeyum Eppothum, M Saravanan will find this news story useful.