www.garudabazaar.com

LATEST: துல்கர் சல்மானை வைத்து முன்னணி நடிகர் இயக்கும் புதிய படத்தின் Colorful First Look!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துல்கர் சல்மான் திருடனாக நடித்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வாழ்க்கை வரலாற்று கிரைம் த்ரில்லர் படமான 'குருப்' வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இந்த படத்தில் மனோஜ் பாஜ்பாய், சோபிதா துலிபாலா, இந்திரஜித் சுகுமாரன், சன்னி வெய்ன், ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் நடித்துள்ளனர். இது போக போலிசாக நடித்த மலையாள ஆக்‌ஷன் த்ரில்லர் 'சல்யூட்' மற்றும் தமிழ் படமான 'ஹே சினாமிகா' ஆகியவை அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

dulquer salmaan next film with this famous actor

இந்நிலையில் இன்று (28.07.2021) மலையாள நடிகர் துல்கர் சல்மானின் 35 வது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்து அடுத்து வரவிருக்கும் தெலுங்கு படத்திலிருந்து அவரது கதாபாத்திரத்தின் முதல் தோற்றத்தை படக்குழு இன்று வெளியிட்டனர்.

dulquer salmaan next film with this famous actor

இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

dulquer salmaan next film with this famous actor

அதனைத்தொடர்ந்து இன்று (28.07.2021) துல்கரின் மற்றுமொரு புதுப்பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை மலையாள பட உலகில் முன்னணி நடிகரான சவுபின் சாகிர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே துல்கரை வைத்து 'பறவ' படத்தை இயக்கியவர் ஆவார். இந்த படத்தை துல்கர் சல்மானே தயாரிக்கிறார். "ஓதிரம் கடஹம்" என இந்த படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.

dulquer salmaan next film with this famous actor

இந்த படத்தில் பணிபுரியும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் இனிவரும் நாட்களில் வெளியிடப்படலாம்.

dulquer salmaan next film with this famous actor

People looking for online information on Dulquer salmaan, Soubin Shahir will find this news story useful.