பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைகிறாரா பிரபல விஜே?... மேலும் ஒரு பெண் போட்டியாளரா..?
முகப்பு > சினிமா செய்திகள்இந்நிலையில் சின்னத்திரை நடிகர் அசீம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக சில வாரங்களாகவே கூறப்பட்டு வந்தது. அவரும் இதனை உறுதி செய்தார். ஆனால் இன்னும் அவரது வருகை தாமதமாவதை அடுத்து பிரபல Vj மகேஸ்வரி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குகொள்ள போவதாக செய்திகள் வைரலாகி வருகிறது. அதற்கு காரணம் அவர் வெளியிட்டிருக்கும் ஒரு போட்டோ தான்.

போட்டியாளர்கள் ஆரம்பத்தில் ஒரு குறிப்பிட்ட தனியார் ஹோட்டலில் தன்மைப்படுத்தப் இருந்தனர். இந்நிலையியில் Vj மகேஸ்வரி அதே ஹோட்டலில் தங்கியிருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, 'சீக்கிரமே ஒரு ஆச்சரியமான அறிவிப்பை எதிர்பாருங்கள்' என்று கூறியுள்ளார். உடனே ரசிகர்கள் 'நீங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறீர்களா?' என்பது போல் கேட்க ஆரம்பித்து விட்டனர். ஆனால் அவர் தரப்பில் இருந்து இன்னும் எந்த பதிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.