#BREAKING : மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பு காட்சியாக திரையிடப்படும் செம அரசியல் படம்!
முகப்பு > சினிமா செய்திகள்திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அடுத்த வாரம் வெளியாகும் திரைப்படத்தை இன்று சிறப்பு காட்சி பார்க்கவுள்ளார்.

ஜீவா நடிப்பில் உருவான திரைப்படம் ஜிப்ஸி. ராஜு முருகன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். சுதந்திரமாக சுற்றி திரியும் இசை கலைஞனுக்கு வரும் காதலும் அதன் பின் அவன் சமூகத்தில் சந்திக்கும் பிரச்சனையையும் மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இத்திரைப்படத்துக்கு இசையமைக்கிறார்.
இந்நிலையில் ஜிப்ஸி படத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பார்க்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஃபோர் ஃப்ரேம்ஸ் தீயேட்டரில் இன்று மாலை 6 மணிக்கு இத்திரைப்படத்தை காணவுள்ளதாக கூறப்படுகிறது. வரும் மார்ச் 6 அன்று இடத்திரைப்படம் வெளியாகவுள்ளது.
Tags : Jiiva, Raju murugan, Gypsy, MKStalin