RRR Others USA
www.garudabazaar.com

பிரபல OTT-யில் பல மொழிகளில் வெளியாகும் பாகுபலி பிரபாஸ் நடித்த 'ராதே ஷ்யாம்'! எப்போ? எதுல?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபாஸ் நடிப்பில் வெளிவந்துள்ள வெற்றிப்படமான “ராதே ஷியாம்” திரைப்படத்தின் டிஜிட்டல் பிரீமியர் Prime Video மூலம் உலகளவில் வெளியிடப்படுகிறது

Prime Video announces OTT digital premiere of Prabhas Radhe Shyam

ராதே கிருஷ்ணா குமார் இயக்கத்தில், UV கிரியேஷன்ஸ் தயாரித்து கோபி கிருஷ்ணா மூவிஸ் வழங்கும் வெளிவந்துள்ள காதல் கதை களம் கொண்ட ராதே ஷியாம் திரைப்படத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே, சச்சின் கெடேகர், பிரியதர்சி புலிகொண்டா, பாக்யஸ்ரீ, ஜெகபதி பாபு, முரளி ஷர்மா, குணால் ராய் கபூர், ரித்தி குமார், சாஷா செத்ரி, சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Prime Video announces OTT digital premiere of Prabhas Radhe Shyam

மும்பை, இந்தியா- மார்ச், 28, 2022-  பிரபாஸ் நடிப்பில் வெளிவந்துள்ள ராதே ஷ்யாம் திரைப்படத்தின் டிஜிட்டல் ப்ரீமியரை Prime Video இன்று அறிவித்துள்ளது. வாழ்க்கைக்கான அணுகுவதில் முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்தைக் கொண்ட இருவரின் காதல் கதை இது. விதியையும் ஊழ்வினையையும் முழுமையாக நம்பும் விக்ரம் ஆதித்யா (பிரபாஸ்) அறிவியலின் சக்தியைப் பெரிதும் நம்பும் பிரேர்னாவிடம் (பூஜா ஹெக்டே) காதலில் விழுகிறார். ராதே ஷியாம் திரைப்படத்தை ஏப்ரல் 1, 2022 முதல் தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யலாம்.

Prime Video announces OTT digital premiere of Prabhas Radhe Shyam

“புதுயுகத்தின், எல்லைகளில்லா சினிமாவைக் கச்சிதமாக எதிரொலிக்கும் கதையே ராதே ஷ்யாம்” என்கிறார் நடிகர் பிரபாஸ். அவர் மேலும் கூறுகையில் “தொலைநோக்குப் பார்வையுடன் செயலாற்றும் இயக்குனர் ராதா கிருஷ்ணா, பூஜா ஹெக்டே மற்றும் எங்கள் மொத்த குழுவினரும் தங்கள் உழைப்பைச் செலவிட்டு அனைவரும் அனுபவிக்கும் வகையில் இத்திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். டிஜிட்டல் வெளியீட்டின் மூலம் இந்தக் காதலை உங்களிடம் கொண்டு வருவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களிடமிருந்து அன்பையும் ஆதரவையும் தொடர்ந்து பெறுவதை எதிர்பார்க்கிறேன்.” என்றார்.

இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள Prime மெம்பர்கள் உறுப்பினர்கள் ஏப்ரல்-1 முதல் தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ராதே ஷ்யாமின் டிஜிட்டல் பிரீமியரை ஸ்ட்ரீம் செய்யலாம்.

Trailer:https://amazonprimevideo.box.com/s/8lj8a2nriaqhwc55990dz46jdgeipfdn

தொடர்புடைய இணைப்புகள்

Prime Video announces OTT digital premiere of Prabhas Radhe Shyam

People looking for online information on OTT, Pooja Hegde, Prabhas, Prime Video, Radhe Shyam will find this news story useful.