தாவணியில் 'விருமன்' பாட்டுக்கு செம்ம குத்து டான்ஸ் ஆடிய அதிதி ஷங்கர்.. தீயாய் பரவும் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிகர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கும் விருமன் படத்தில் கதாநாயகியாக ந்டித்து முடித்துள்ளார்.

Adithi Shankar Dancing for Viruman Movie Single Song

Also Read | BOX OFFICE-ல்சம்பவம் செய்யும் மகேஷ்பாபு - கீர்த்தி சுரேஷ்.. 5 நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா?

விருமன் திரைப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது.  யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைக்கிறார், மாநகரம் புகழ் எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய, அனல் அரசு சண்டைப் பயிற்சி அளிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், தேனி பகுதியில் தொடங்கப்பட்டது.  மதுரை, தேனி மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் இந்த படத்தின் படபிடிப்பு 60 நாட்களாக தொடர்ந்து நடைபெற்றது.

Adithi Shankar Dancing for Viruman Movie Single Song

கடந்த ஆண்டு டிசம்பர் 21ம் தேதி முடிவடைந்த இந்த படப்பிடிப்பு குறித்து பேசியிருந்த நடிகர் கார்த்தி, நீண்ட நாட்களுக்கு பின் மதுரை மக்களை பார்த்து சந்தோஷமடைவதாக முன்னதாக குறிப்பிட்டிருந்தார். விருமன் படம்  விரைவில் வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான சிங்கிள் ப்ரோமோ வரவேற்பை பெற்றது. பொங்கலுக்கு இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு குறித்து பட நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது.

சமீபத்தில் நடிகை அதிதி ஷங்கர், சென்னை தனியார் மருத்துவக்கல்லூரியில் மருத்துவ பாடத்தில் தேர்ச்சி அடைந்து பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்ததாக சிம்புவுக்கு ஜோடியாக கொரோனா குமார் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில்  துவங்க உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் சிம்புவின் 48வது திரைப்படமாகும். இந்த படத்திற்கு மாநகரம் படத்தின் இசையமைப்பாளர் ஜாவித் ரியாஸ் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்முறையாக சிம்பு படத்திற்கு ஜாவித் ரியாஸ் இசையமைக்க உள்ளார்.

Adithi Shankar Dancing for Viruman Movie Single Song

ஏற்கனவே இந்த படத்தின் டைட்டில் ப்ரோமோவுக்கான பாடலை Think Music தளத்தில் வெளியிட்டுள்ளது. CSK சிங்கங்களா எனும் பாடல் சிம்பு, பூவையார் குரலில் உருவாகி வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

இயக்குனர் கோகுல்‌, கொரோனா குமார் என்ற புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படம் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தின் ஸ்பின் ஆப் ஆகும். அந்த படத்தில் வந்த சுமார் மூஞ்சி குமார் கதாப்பாத்திரத்தின் நீட்சியாக கொரோனா குமார் கதாபாத்திரம் உருவாக உள்ளது.

Adithi Shankar Dancing for Viruman Movie Single Song

இந்நிலையில்  விருமன் படத்தின் "கஞ்சாப்பூ கண்ணால" பாட்டுக்கு நடிகை அதிதி ஷங்கர் ஆடிய குத்து டான்ஸ் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. சிவப்பு - வெள்ளை பட்டு தாவணியில் நடிகை இந்த நடனத்தை ஆடியுள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

தாவணியில் 'விருமன்' பாட்டுக்கு செம்ம குத்து டான்ஸ் ஆடிய அதிதி ஷங்கர்.. தீயாய் பரவும் வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Adithi Shankar Dancing for Viruman Movie Single Song

People looking for online information on Adithi Shankar, Karthi, Viruman Movie, Viruman Movie Single Song will find this news story useful.