’ஆயிரத்தில் ஒருவன் சோழன், சோழ தேசம் சென்றால்…’ – பார்த்திபன் வெளியிட்ட வீடியோ!
முகப்பு > சினிமா செய்திகள்2010ம் ஆண்டு செல்வராகவனின் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா நடித்து வெளியான திரைப்படம் 'ஆயிரத்தில் ஒருவன்'. வெளியானபோது சரியான வரவேற்பை பெறாவிட்டாலும் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த ‘கல்ட்’ (Cult) திரைபடமாக தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.
வரலாறையும், மாய யதார்த்தத்தையும் இணைக்கும் புள்ளியான இந்த படத்தில் பார்த்திபன் காணாமல் போன கடைசி சோழ மன்னனாக நடித்திருப்பார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக க்ளைமாக்சில் இவரால் சோழ தேசத்தை காண முடியாது. ஆனால் இன்று தஞ்சை பெரிய கோயிலில் நடைபெறும் குடமுழுக்கு திருவிழாவுக்கு பார்த்திபன் சென்றுள்ள வீடியோக்களை தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தஞ்சை என்று அழைக்கப்படும் தஞ்சாவூர், சோழர் ஆட்சி காலத்தில் அந்நாட்டின் அங்கமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
திரையுலகிலிருந்து நான் மட்டுமே ... நான் புறமும் நோக்க! pic.twitter.com/gQeJRHnnIh
— Radhakrishnan Parthiban (@rparthiepan) February 5, 2020