www.garudabazaar.com

மிஷ்கினின் ‘பிசாசு 2’… ஆண்ட்ரியா கதாபாத்திரம் இதுதானா?… வெளியான லேட்டஸ்ட் poster!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 திரைப்படத்தில் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Mysskin andrea pisasu 2 latest viral poster

Also Read | ’ஆரம்பிக்கலாங்களா’… விக்ரம் படத்தின் வேற மாரி Promotion… ராஜ்கமல் பிலிம்ஸின் லேட்டஸ்ட் update!

மிஷ்கினின் பிசாசு…

இயக்குனர் மிஷ்கின் தன்னுடைய தனித்துவமான படமாக்கல் பாணியால் சிறந்த படங்களைக் கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய் மற்றும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஆகிய படங்கள் வரிசையில் 2016-ல் இயக்குனர் பாலா தயாரிப்பில், மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் திரைப்பட விமர்சகர்கள்  மத்தியில்  நல்ல விமர்சனங்களை பெற்றது. தமிழ் சினிமாவில் வந்த பேய் படங்களில் தனித்துவமான படமாக இன்றுவரை பேசப்பட்டு வருகிறது.

Mysskin andrea pisasu 2 latest viral poster

பிசாசு படத்துக்குப் பிறகு மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ உள்ளிட்ட படங்கள் ரிலீஸாகின. இந்நிலையில் தற்போது தனது ஹிட் படமான பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்துள்ளார். தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடந்து வருகின்றன. ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் T.முருகானந்தம் தயாரிக்கிறார்.

Mysskin andrea pisasu 2 latest viral poster

கலைஞர்கள்…

இந்த படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். படத்தின் முதல் சிங்கிள் பாடலான "உறவின் பாட்டு" பாடல் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கடந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகி கவனத்தைப் பெற்றது.

Mysskin andrea pisasu 2 latest viral poster

டீசர் அறிவிப்பு

இந்நிலையில் படத்தின் டீசர் வரும் ஏப்ரல் 29(நாளை) ஆம் நாள் மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் டீசர் தென்னக மொழிகளான தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என 4 மொழிகளிலும் வெளியாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது. இதையடுத்து டீசர் அறிவிப்பை முன்னிட்டு படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் ஆண்ட்ரியா பெண் பாதிரியார் உடையணிந்து கார் ஓட்டி செல்வது போவது போல உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தில் ஆண்ட்ரியா பாதிரியார் வேடத்தில் நடிப்பதாக தெரிகிறது. இதற்கு முன்னர் வெளியான சில புகைப்படங்களிலும் ஆண்ட்ரியா பாதிரியார் உடை போன்ற ஆடை அணிந்து தோற்றமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mysskin andrea pisasu 2 latest viral poster

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

மிஷ்கினின் ‘பிசாசு 2’… ஆண்ட்ரியா கதாபாத்திரம் இதுதானா?… வெளியான லேட்டஸ்ட் POSTER! வீடியோ

Mysskin andrea pisasu 2 latest viral poster

People looking for online information on Andrea, ஆண்ட்ரியா, பிசாசு 2, மிஷ்கின், Mysskin, Pisasu 2, Pisasu 2 Movie Updates will find this news story useful.