துருவ் விக்ரமின் ஆதித்யா வர்மாவில் இணையும் இந்த யூடியூப் பிரபலம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'அர்ஜூன் ரெட்டி' படத்தை இயக்குநர் பாலா, 'வர்மா' என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தார். படத்தின் இறுதி வடிவத்தை பார்த்த தயாரிப்பாளர் தரப்புக்கு திருப்தி அளிக்காததால் படத்தை கைவிடுவதாக அவர்கள் அறிவித்தனர். மீண்டும் புதுமையான குழுவுடன் படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாகவும் அறிவித்தனர்.

Youtube star Anbu thasan plays a important role in Dhruv's Adithya Varma

அதன் படி நாயகிகளாக பனிதா சந்து, பிரியா ஆனந்த் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இந்த படத்துக்கு பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ளவிருக்கிறார்.

அதன் ஒரு பகுதியாக யூடியூப் பிரபலமான அன்பு தாஸன் நடிக்கவிருக்கிறார்.  இவர் ஏற்கனவே ஹிப்ஹாப் தமிழாவின் 'மீசைய முறுக்கு', நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.  மேலும் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் ரியோ ராஜ், ஆர்ஜே விக்னேஷ்காந்த், நாஞ்சில் சம்பத் ஆகியோருடன் நடித்துவருகிறார்.