
கைல கிளாஸூ... Amala Paul .. புது வருசம் flight-லயே தொடங்கிடுச்சோ!.. செம trending!
முகப்பு > சினிமா செய்திகள்தமிழ் சினிமாவில் மைனா உள்ளிட்ட படங்களில் தம் எதார்த்த நடிப்பை வழங்கியவர் நடிகை அமலா பால்.

அதன் பின்னர், விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்த அமலா பால், வெகுவாக ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார். பின்னர் அம்மா, கணக்கு, ஆடை உள்ளிட்ட திரைப்படங்களில் தனித்து நடித்த அமலா பால், ‘குடியெடமைதே’ எனும் தெலுங்கு வெப் தொடரிலும் நடித்தார்.
இதனிடையே கடாவர், ஆடு ஜீவிதம், அதோ அந்த பறவை போல மற்றும் பல திரைப்படங்கள் அமலா பாலின் கைவசம் உள்ளன. இவற்றுடன் ரஞ்சிஷ் ஹி சாஹி (Ranjish Hi Sahi)என்கிற வலைத் தொடரின் மூலம் இந்தியிலும் அமலா பால் அறிமுகமாகிறார். சமீபத்தில் வெளியான இத்தொடரின் டீசர் அமோக வரவேற்பை பெற்றது.
எப்போதும் நண்பர்கள், பார்ட்டி என மகிழ்ந்திருக்கும் அமலா பால், அண்மையில் தமது சகோதரரின் திருமணத்தை முன்னிட்டு நடந்த பார்ட்டியில் ஜாலியாக நடனம் ஆடி களித்த வீடியோக்களையும் புகைப்படங்களையும் காண முடிந்தது. இதனிடையே அண்மையில், துபாய் அரசால் தமிழ், மலையாளர் உள்ளிட்ட பல்வேறு மொழிகளைச் சேர்ந்த இந்திய சினிமா கலைஞர்கள் பலருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது. தமிழில் நடிகை த்ரிஷா, நடிகர் பார்த்திபன் ஆகியோர் கோல்டன் விசா பெற்றனர்.
இந்நிலையில் விமானத்தில் முதல்தர பிசினஸ் இருக்கையில் அமலா பால் பயணித்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளன. இதில் விமானப் பணிப்பெண், அமலா பால் அவர்களுக்கு பானம் வேண்டுமா ஊற்ற, விண்வெளி ராக்கெடு உள்ளமைப்பு போன்று தான் வடிவமைக்கப் பட்டிருந்த அந்த விமானத்தில் அமலா பால் அந்த பானத்தை அருந்துகிறார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Amala Paul Night Party Trending Video அமலா பால்
- வீட்டில் பார்ட்டி கொண்டாடும் நடிகை அமலா பால் அதுதான் காரணமாம் Actress Amala Paul Celebrates House Party For This Reason
- Amala Paul Shares An Emotional Note About Family After Losing Father | நடிகை அமலா பால் தனது அம்மா, அப்பா குறித்து உருக்கம்
- Amala Paul Shares An Emotional Note About Family After Losing Father | நடிகை அமலா பால் தனது அம்மா, அப்பா குறித்து உருக்கம்