Cadaver D Logo Top
Viruman Logo Top
www.garudabazaar.com

Salt 'n' Pepper லுக்கில் விஜய் ஆண்டனி.. வெளியானது 'கொலை' படத்தின் ட்ரைலர்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனது திரை பயணத்தை இசையமைப்பாளராக ஆரம்பித்த விஜய் ஆண்டனி, 'நான்' என்னும் திரைப்படம் மூலம் நாயகனாகவும் அறிமுகமாகி இருந்தார்.

Vijay antony next kolai movie trailer released

இதனைத் தொடர்ந்து, சலீம், பிச்சைக்காரன், சைத்தான், காளி, கோடியில் ஒருவன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களிலும் நாயகனாக விஜய் ஆண்டனி நடித்திருந்தார்.

இதற்கு மத்தியில், அண்ணாதுரை, திமிரு பிடிச்சவன் உள்ளிட்ட திரைப்படங்களின் எடிட்டர் ஆகவும் விஜய் ஆண்டனி பணிபுரிந்து வந்தார்.

தொடர்ந்து, பிச்சைக்காரன் 2, ரத்தம், கொலை, அக்னி சிறகுகள் உள்ளிட்ட ஏராளமான படங்களிலும் விஜய் ஆண்டனி அடுத்தடுத்து நடித்து வருகிறார். இதில், பிச்சைக்காரன் 2 படத்தை அவரே இயக்கி நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும், 'கொலை' என்னும் திரைப்படத்தை பாலாஜி குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், சமீபத்தில்.வெளியிடப்பட்டிருந்தது.

Vijay antony next kolai movie trailer released

விஜய் ஆண்டனியுடன் இந்த படத்தில், ரித்திகா சிங், ராதிகா சரத்குமார், முரளி ஷர்மா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். மெரினா, மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த கிரிஷ் கோபாலகிருஷ்ணன், கொலை படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

ஏற்கனவே, கொலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்கள் பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்ததால், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது. இந்நிலையில், தற்போது கொலை படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.

Vijay antony next kolai movie trailer released

ஒரு கொலை நடப்பதும், அதன் பின்னால் இருக்கும் நபர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பது தான் இந்த படத்தின் கதைக்களம் என்பது ட்ரைலர் மூலம் தெரிய வருகிறது. அதே போல, ஒரு துப்பறியும் அதிகாரி கதாபாத்திரத்தில், இதுவரை காணாத சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில், விஜய் ஆண்டனி வருவதும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இன்வெஸ்ட்டிகேஷன் வகையில், கொலை திரைப்படம் உருவாகி உள்ளதால், படத்தின் ரிலீஸையும் மக்கள் எதிர்நோக்கி காத்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Vijay antony next kolai movie trailer released

People looking for online information on Kolai Movie, Raadhika Sarathkumar, Ritika singh, Vijay Antony will find this news story useful.