www.garudabazaar.com

"வாயடைச்சு போயிட்டேன்..!" "1000 காரணம் செல்லுவேன்" - அமிதாப் பச்சனின் Jhund படம் பற்றி தனுஷ் விமர்சனம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மும்பை: அமிதாப் பச்சன் நடித்து இன்று வெளியான Jhund படத்தை ஸ்பெஷல் ஷோ பார்த்து தனுஷ் விமர்சனம் செய்துள்ளார்.

Dhanush Review about nagraj manjule Amitabh Jhund Movie

ஸ்லம் சாக்கர் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிறுவனரான விஜய் பார்சேயின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, அமிதாப் பச்சன், ஆகாஷ் தோசர் மற்றும் ரிங்கு ராஜ்குரு நடித்துள்ள இந்த படத்தை நாகராஜ் மஞ்சுளே எழுதி இயக்கியுள்ளார். இந்த  ஜுந்த் படம் இன்று (04.03.2021) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

Dhanush Review about nagraj manjule Amitabh Jhund Movie

T-Series, Tandav Films Entertainment Pvt.Ltd மற்றும் Aatpat Films ஆகியவற்றின் கீழ் பூஷன் குமார், கிரிஷன் குமார், ராஜ் ஹிரேமத், சவிதா ஹிரேமத், நாகராஜ் மஞ்சுளே, கர்கி குல்கர்னி மற்றும் மீனு அரோரா ஆகியோர் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் தெருவோர குழந்தைகளை இணைத்து கால்பந்து அணியை உருவாக்க முயற்சிக்கும் பேராசிரியராக அமிதாப் பச்சன் நடித்துள்ளார். 

Dhanush Review about nagraj manjule Amitabh Jhund Movie

இந்த படத்தை பார்த்த தனுஷ் கூறியிருப்பதை வீடியோவாக படத்தயாரிப்பாளரான டி-சீரீஸ் வெளியிட்டுள்ளனர். அதில், இந்த படம் ஒரு மாஸ்டர்பீஸ். எங்கு எப்படி ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை. அசந்து போய் விட்டேன்.

நாகராஜ் மஞ்சுலேவின் இயக்கம் அருமை. படத்தின் ஆயிரம் டெக்னிக்கல் காரணங்கள் பற்றி நான் பேசுவேன். இந்த படத்தில் அனைத்தும் சிறப்பு. இந்த படம் அனைவரும் அனுபவிக்க வேண்டிய ஒரு பேரனுபவம்.

Dhanush Review about nagraj manjule Amitabh Jhund Movie

எனக்கு பேச்சே வரவில்லை. அமிதாப் பச்சன் சிறப்பாக நடித்திருக்கிறார். மொத்த படக்குழுவுக்காகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இது போன்ற படத்தை கொடுத்ததற்காக நாக்ராஜ் மஞ்சுலேவுக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த படம் பலரின் கவனத்தையும் ஈர்க்கப் போகிறது. இந்த படத்தை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி" என தனுஷ் கூறியுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Review about nagraj manjule Amitabh Jhund Movie

People looking for online information on Amitabh Bachchan, Dhanush, Jhund Movie, Jhund Review, Nagraj Manjule will find this news story useful.