www.garudabazaar.com

இந்த வாரம் OTT-யில் ரிலீஸ் ஆகும் இந்திய படங்கள்.. எது? & எப்ப?.. Full List ரெடி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனாக்கு பிறகான காலகட்டத்தில் ஓடிடி எனும் மீடியம் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ் பார்க்கவும், திரையரங்குகளில் படம் பார்க்கும் போது ஏற்படும் சில சிக்கல்களை தவிர்க்கவும் இந்திய மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

This Week OTT Release indian films Amazon Prime Netflix Zee5

திரையரங்கில் வெளியாகாமல், நேரடியாக ஓடிடி தளங்களில் பீரிமியராக வெளியாகும் திரைப்படங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே போல, திரையரங்குகளில் வரும் படங்கள், குறிப்பிட்ட சில தேதிக்கு பின், பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகின்றன. அப்படி நேரடியாகவும், திரையரங்க ரிலீசுக்கு பிறகும், ஓடிடி தளங்களில், இந்த மார்ச் முதல் வாரம் என்னென்ன திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

டிஜே தில்லு

இயக்குநர் விமலா கிருஷ்ணன் இயக்கத்தில் சித்து, நேஹா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் 'டிஜே தில்லு'. ஆஹா ஒடிடியில் வெளியாகி உள்ளது. கடந்த பிப்ரவரி 12 அன்று ரிலீசானது. காமெடி வகைமையில் இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

This Week OTT Release indian films Amazon Prime Netflix Zee5

வீரமே வாகை சூடும் - சாமானியடு 

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில்,  நடிகர் விஷால் நடிப்பில்   அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கியுள்ள “வீரமே வாகை சூடும்” படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மொழிகளில், 2022 பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியானது. 

இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க,  டிம்பிள் ஹயாதி அறிமுக நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, RNR மனோகர்,  பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, KSG வெங்கடேஷ், மஹா காந்தி, மரியம் ஜார்ஜ் Black sheep தீப்தி முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ் - தெலுங்கில் ஜி5-ல் வெளியாகி உள்ளது.

No Time to Die 

ஜேம்ஸ்பாண்டாக டேனியல் கிரெய்க் தோன்றிய கடைசி திரைப்படம் 'நோ டைம் டு டை' . ஜேம்ஸ் பாண்ட் பட ரசிகர்களுக்கு விருந்தாக இந்த படம் வெளியாகி இருந்தது. நல்ல வரவேற்பையும் இந்த படம் பரவலாக பெற்றது. அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம், மலையாளத்தில் இந்த படம் வெளியாகி உள்ளது. 

This Week OTT Release indian films Amazon Prime Netflix Zee5

இந்த படங்களுடன் The Invisible Thread எனும் இத்தாலிய திரைப்படமும், Meskina எனும் டச்சு திரைப்படமும் நெட்பிளிக்ஸில் வெளியாகி உள்ளது. Obba எனும் கன்னட படமும் Zee5-ல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

This Week OTT Release indian films Amazon Prime Netflix Zee5

People looking for online information on Amazon Prime, Google Play, Hotstar, JIO, Netflix, Prime Video, Voot, Zee5 will find this news story useful.