IKK Others
MKS Others
www.garudabazaar.com

VIDEO: "ரஜினி இந்த மாதிரி படத்துல நடிச்சா நல்லாருக்கும்!" - Blue சட்டை மாறன் பரபரப்பு பேட்டி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சினிமா விமர்சனங்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் Blue சட்டை மாறன்.

Blue sattai Maaran Anti Indian Movie Behindwoods Interview

இவரின் பாமரத்தனமான விமர்சனங்கள் சினிமா சம்பந்தபட்டவர்களை கோபமடைய வைத்தாலும், ரசிகர்களின் ஆதரவு கனிசமாக இவருக்கு உண்டு. இந்த ப்ளூ சட்டை மாறன் இயக்கியுள்ள திரைப்படம் ஆன்டி இண்டியன். இது இவருக்கு முதல் திரைப்படமாகும். ஆதம் பாவா இந்த படத்தை Moon பிக்சர்ஸ் சார்பாக தயாரித்துள்ளார்.

Blue sattai Maaran Anti Indian Movie Behindwoods Interview

சென்சார் போர்டால் தடைவிதிக்கப்பட்டு, பிறகு பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டது. இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் போஸ்டர்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் ‘ஆடுகளம்’ நரேன்,  ‘வழக்கு எண்’ முத்துராமன், ராதாரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Blue sattai Maaran Anti Indian Movie Behindwoods Interview

வரும் டிச-10 ஆம் தேதி இந்தப்படம் வெளியாக உள்ளது.  இதனை முன்னிட்டு நமது Behindwoods சேனலுக்கு இயக்குனர் மாறன் பேட்டி அளித்துள்ளார். அதில் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் குறித்த அரசியல், சினிமா பற்றிய கேள்விக்கும் பதில் அளித்துள்ளார். அதில் ரஜினிகாந்த் கடைசி விவசாயி போன்ற படங்களில் நடித்தால் நல்லாருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் "ரஜினிகாந்த 12 கோடி தமிழர்களையும் பகிரங்கமாக ஏமாற்றிவிட்டார் என்றும்,  தலைவனாக இருக்க ஒரு தகுதி வேண்டாமா?" என்றும் கூறியுள்ளார். பேட்டியின் முழு விடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Blue sattai Maaran Anti Indian Movie Behindwoods Interview

இந்த படத்தின் சிறப்பு திரையிடல் சமீபத்தில் நடைபெற்றது, படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் பாரதிராஜா, சீமான், சேரன் பாராட்டியிருந்தனர்.

VIDEO: "ரஜினி இந்த மாதிரி படத்துல நடிச்சா நல்லாருக்கும்!" - BLUE சட்டை மாறன் பரபரப்பு பேட்டி! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Blue sattai Maaran Anti Indian Movie Behindwoods Interview

People looking for online information on Anti Indian, Blue Sattai Maaran, Rajinikanth will find this news story useful.