Jail Others
IKK Others
MKS Others
www.garudabazaar.com

போடு வெடிய! சென்னையில் ஃபகத் ஃபாசில்.. ‘புஷ்பா’ படத்தின் மிரட்டலான அப்டேட்! பரவும் ஃபோட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Pushpa, Chennai :பான் இந்தியா திரைப்படமான புஷ்பா திரைப்படத்தின் டிரெய்லர் மிக சமீபத்தில் வெளியாகி இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தின் தமிழ் பதிப்பு உரிமத்தை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

Fahadh Faasil chennai Le Magic lantern alla arjun Pushpa dubbing

புஷ்பா திரைப்படத்தின் முதலாம் பாகம் தான் இது என்றாலும், இந்த படத்திற்கே எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளும் நாளும் அதிகரித்து வருகிறது.  இந்த படத்தில் செம்மரக் கடத்தல் மன்னனாக அல்லு அர்ஜூன் வித்தியாசமான கெட்டப்பில் தோன்றுகிறார்.

முன்னதாக அல்லு அர்ஜூன் நடித்துள்ள 'புஷ்பராஜ் கேரக்டரின் அறிமுகம்' ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. முட்டம்செட்டி மீடியாவுடன் இணைந்து மைத்ரி மூவி மேக்கர்ஸின் நவீன் எர்நேனி மற்றும் ஒய் ரவி ஷங்கர் ஆகியோர், இரண்டு பாகங்களாக புஷ்பா திரைப்படம் வெளிவரும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

இதனிடையே தற்போது வெளியான டிரெய்லரில், ‘புஷ்பா’ என்றால் ஃப்ளவர் இல்லை, ஃபயர் என அல்லு அர்ஜூன் பேசும் பஞ்ச் வசனமும், காட்டில் கோடரி தான் எங்கள் ஆயுதம், துப்பாக்கி தான் உங்கள் ஆயுதம், மொத்தத்தில் அனைவரும் யுத்தத்தில் தான் இருக்கிறோம் என காவல்துறையினரிடம் பேசும் வசனமும், பிரம்மாண்ட காட்சிகளும் அனைவரையும் கவர்ந்தன.  அல்லு அர்ஜூனுடன் ராஷ்மிகாவின் காதல் போர்ஷனும் இந்த டிரெய்லரில் இடம் பெற்றுள்ளன.

அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தண்ணா முதல் முறையாக கைகோர்த்துள்ள இந்த படத்தை இயக்குநர் சுகுமார் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார். இப்படத்தில் அல்லு அர்ஜூனுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் ஃபகத் ஃபாசில் நடித்துள்ளார்.

ஆந்திரப் பிரதேச காடுகளில் நடைபெறும் செம்மர திருட்டு குறித்து புஷ்பா விவரிக்கிறது. வருடம் டிசம்பர் 17-ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தில் ஃபகத் ஃபாசிலின் கெட்டப் பலருக்கும் பிடித்தமானதாக மாறியுள்ளது. மொட்டை அடித்துக்கொண்டு மிரட்டலான கதாபாத்திரமாக ஃபகத் ஃபாசில் இப்படத்தில் காட்சி தோன்றவிருக்கிறார்.

Fahadh Faasil : இந்நிலையில் சென்னை லீ மேஜிக் லாண்டர்ன் ப்ரிவியூ தியேட்டர் மற்றும் டப்பிங் ஸ்டூடியோவுக்கு நடிகர் ஃபகத் ஃபாசில் வருகை தந்தார். அங்கு புஷ்பா திரைப்படத்தின் டப்பிங் பணிகளில் ஃபக்த் ஃபாசில் ஈடுபடுவார் என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக, நடிகர் ஃபகத் ஃபாசில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லீ மேஜிக் லாண்டர்ன் ப்ரிவியூ தியேட்டர் மற்றும் டப்பிங் ஸ்டூடியோவுக்கு வருகை தரும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

முன்னதாக வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட நேரடி தமிழ்ப் படங்களில் நடித்த ஃபகத் ஃபாசில், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும், ‘விக்ரம்’ திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து முக்கியதொரு வலுவான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Fahadh Faasil chennai Le Magic lantern alla arjun Pushpa dubbing

People looking for online information on Allu Arjun, Fahadh Faasil, Fahadh Faasil chennai, Fahadh Faasil pushpa, Lyca Productions, Pushpa Dubbing, Pushpa Trailer, PushpaTrailer, Rashmika Mandanna, Trending will find this news story useful.