Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

நடிகர் தனுஷ் குரலில் 'கர்ணன்' திரைப்படத்தின் மூன்றாம் பாடல்.. கிராமத்து இசையில் வெளியானது..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது ஜகமே தந்திரம், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக ஹிந்தியில் அத்ரங்கி ரே, கார்த்திக் நரேன் இயக்கும் D43, செல்வராகவனின் நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்களை இவர் கைவசம் வைத்துள்ளார். மேலும் ஹாலிவுட்டிலும் தி கிரே மேன் படத்தில் நடிக்க இவர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் தற்போது தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டனியில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படத்தின் மூன்றாம் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

dhanush karnan third single released கர்ணன் படத்தின் மூன்றாம் பாடல்

கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்தில் ரஜிஷா விஜயன், கௌரி கிஷன், லால், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் மூன்றாம் சிங்கிளான 'திரௌபதியின் முத்தம்' என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷின் குரலில் இந்த பாடல் நம்மை வேறு உலகத்திற்கு கொண்டு செல்கிறது என்று தான் சொல்லவேண்டும். இந்நிலையில் வெளியான சில நிமிடங்களிலேயே இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.அதாவது வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து உலகமெங்கிலும் கர்ணன் படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் கர்ணன் படத்தின் பாடல்களான "கண்டா வர சொல்லுங்க", "பண்டாரத்தி புராணம்" சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பாடமாக கர்ணன் மாறி வருகிறது மட்டும் உறுதி.

நடிகர் தனுஷ் குரலில் 'கர்ணன்' திரைப்படத்தின் மூன்றாம் பாடல்.. கிராமத்து இசையில் வெளியானது..! வீடியோ

Tags : Dhanush, Karnan

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

dhanush karnan third single released கர்ணன் படத்தின் மூன்றாம் பாடல்

People looking for online information on Dhanush, Karnan will find this news story useful.