Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

கர்ணன் டீசர் எப்போது?... நடிகர் தனுஷ் கொடுத்த மரண மாஸ் அப்டேட்.. செம குஷியில் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது ஜகமே தந்திரம், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக ஹிந்தியில் அத்ரங்கி ரே, கார்த்திக் நரேன் இயக்கும் D43, செல்வராகவனின் நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்களை இவர் கைவசம் வைத்துள்ளார். மேலும் ஹாலிவுட்டிலும் தி கிரே மேன் படத்தில் நடிக்க இவர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் தற்போது தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டனியில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படத்தின் டீசர் அப்டேட்டை தனுஷ் சற்று முன் வெளியிட்டுள்ளார்.

dhanush karna teaser update தனுஷ் கொடுத்த மரண மாஸ் அப்டேட்

கலைப்புலி S தாணு தயாரிக்கும் இப்படத்தில் ரஜிஷா விஜயன், கௌரி கிஷன், லால், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 31-ஆம் தேதி கர்ணன் படம் பற்றிய முக்கிய அப்டேட் வெளியானது. அதாவது வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து உலகமெங்கிலும் கர்ணன் படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் கர்ணன் படத்தின் முதல் பாடலான கண்டா வர சொல்லுங்க" பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதை தொடர்ந்து இரண்டாம் சிங்கிளான 'பண்டாரத்தி புராணம்' என்ற பாடல் வெளியானது. இந்நிலையில் பலரும் எதிர்பார்த்துக் காத்திருப்பது கண்ணன் திரைப்படத்தின் டீசரை தான். இது பற்றி தற்போது தனுஷ் தனது ட்விட்டர் தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார் அவர் கூறும்போது "விரைவிலேயே கண்ணன் படத்தின் டீசர் வெளியாகும்" என்று கூறியுள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Tags : Dhanush, Karnan

தொடர்புடைய இணைப்புகள்

dhanush karna teaser update தனுஷ் கொடுத்த மரண மாஸ் அப்டேட்

People looking for online information on Dhanush, Karnan will find this news story useful.