www.garudabazaar.com

"என்னா கேரக்டர்.." - ‘விடுதலை’ படம் .. தியேட்டர்லயே கணவருக்கு அடி கொடுத்த நடிகை..! EXCLUSIVE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகியுள்ளது.

Devadarshini about Chetan character response in Viduthalai Part 1

விடுதலை படத்தில் நடிகர்கள் பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். தங்கம் எழுதிய வேங்கச்சாமி திரைக்கதையை மூலக்கதையாகக் கொண்டும்,  ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையாக்  கொண்டும் இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை ரிலீஸ் செய்துள்ளது.

பீரியட் டிராமா திரைப்படமான இப்படத்தில் புதிதாக காவல்துறையில் டிரைவராக சேரும் குமரேசன்(சூரி) அங்கு காவல்துறையினரால் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வரும் மக்கள் படை தலைவர் பெருமாள் என்கிற வாத்தியார் (விஜய் சேதுபதி) பிடிபட எவ்வாறு காரணமாகிறார்? இதில் மக்கள் காவல்துறையினரை நம்புகின்றனரா அல்லது மக்கள் படை தலைவர் பக்கம் நிற்கின்றனரா? இதன் பிரச்சனை தொடங்கும் மையம் எது ? இதற்குள் நடக்கும் அரசியல் பின்னணி என்னென்ன? என்று பல கோணங்களில் உருவாகி இருக்கிறது விடுதலை திரைப்படம்.

இந்நிலையில் இப்படத்தில் OC எனும் காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சேத்தன் பிஹைண்ட்வுட்ஸ் இணையதளத்துக்கு பிரத்தியேக பேட்டியளித்துள்ளார். 90களில் மர்மதேசம், அத்திப்பூக்கள் உள்ளிட்ட சீரியல்கள் மற்றும் அண்மையில் விஜய் நடித்த மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் சேத்தன், விடுதலை திரைப்படத்தில் நடித்த தமது கேரக்டர் குறித்து பேசியுள்ளார். அதன்படி “அந்த கேரக்டர் தனக்கு கீழிருக்கும் யாரையும் மதிக்காது, இதேபோல் தனக்கு மேல் இருக்கும் அதிகாரியை வாய்ப்பு கிடைத்தால் மதிக்காது, வேறு வழியின்றி அந்த அதிகாரத்துக்காக மட்டும் மேலதிகாரியை மதிக்கும். இப்படி போலீஸ் துறையில் மட்டுமல்லாமல், நிறைய பேர் இப்படி இருக்கிறார்கள். பார்த்ததுமே அருவெருப்பு வரவேண்டும் என்றிருக்குமாறு இந்த கேரக்டரின் லுக் டிசைன் செய்யப்பட்டது. எனக்கு இந்த கேரக்டர் 22 நாள் சொன்னார்கள். ஆனால் 122 நாட்கள் ஆனது. அதே மாதிரி இந்த கேரக்டருக்கான முடிவு அடுத்த பாகத்தில் தெரியவரும்” என தெரிவித்தார்.    

மேலும் இதே பேட்டியில் பேசிய நடிகையும் சேத்தனின் மனைவியுமான தேவதர்ஷினி, “இந்த கேரக்டரை திரையில் பார்க்கும்போது நானும் என் மகளும் அவரை அடித்துக் கொண்டே இருந்தோம், அந்த அளவுக்கு வெறுக்கத்தக்க கேரக்டர் என்றால், அது நிச்சயமாக வொர்க் அவுட் ஆகியிருக்கிறது என்று அர்த்தம். நமக்கே அப்படி இருக்கிறதென்றால் பார்ப்பவர்களுக்கு நிச்சயமாக இந்த கேரக்டர் வெறுப்பை உண்டுபண்ணியிருக்கும், அது அந்த கேரக்டருக்கு கிடைத்த வெற்றி” என தெரிவித்தார்.

"என்னா கேரக்டர்.." - ‘விடுதலை’ படம் .. தியேட்டர்லயே கணவருக்கு அடி கொடுத்த நடிகை..! EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Devadarshini about Chetan character response in Viduthalai Part 1

People looking for online information on Chetan, Devadarshini, Soori, Vetrimaaran, Viduthalai will find this news story useful.