www.garudabazaar.com

''எப்பவுமே விரைப்பாவே இருக்கனுமா என்ன..?!" - நெட்டிசனுக்கு Deputy Commissioner அர்ஜுன் சரவணன் கொடுத்த பதில்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்விக்கு திருநெல்வேலி Deputy Commissioner அர்ஜுன் சரவணன் ஜாலி பதில் கொடுத்துள்ளார். 

இணையத்தில் கலக்கும் திருநெல்வேலி Deputy Commissioner அர்ஜுன் சரவணன் | tirunelveli deputy commissioner arjun saravavan reply to a netizen goes viral

திருநெல்வேலி மாவட்டத்தின் Deputy Commissioner-ஆக இருப்பவர் அர்ஜுன் சரவணன். இவர் காவல்துறைக்கும் மக்களுக்கும் இடையே சரியான புரிதலையும், நெருக்கத்தையும் தொடர்ந்து தனது நடவடிக்கைகள் மூலம் ஏற்படுத்தி வருகிறார். மேலும் ட்விட்டரில் இவர் நெட்டிசன்களுடன் சகஜமாக பேசி பழகுவதுடன், பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வும் கொடுத்து வருகிறார். இதையடுத்து அர்ஜுன் சரவணன் அவர்களுக்கு ட்விட்டரில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. 

இந்நிலையில் வடிவேலுவின் காமெடி மீம் ஒன்றை பார்த்த இவர், அதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டார். இதற்கு நெட்டிசன் ஒருவர், ''ஒரு போலீஸ் அதிகாரி இதுமாதிரி போஸ்ட் போடுவாறுன்னு நினைக்கல'' என கமன்ட் அடித்தார். இதற்கு பதிலளித்துள்ள அர்ஜுன் சரவணன், ''போலீஸ் அதிகாரி கஞ்சியை சட்டைக்கு போட்டு விரைப்பாக வேலை பாக்கனும். ஆனா ஆளே எப்பவும் விரைப்பாக இருக்கனும்னு எதிர்பார்த்தா எப்படிங்க? கடினமான சூழ்நிலைகளை எளிதில் கடக்க உதவுவதே நல்ல இசையும் நகைச்சுவையுமே!  இளைராஜாவும் வடிவேலுமே மாமருந்து'' என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், சூப்பர், அப்படி சொல்லுங்க சார் என கமன்ட்ஸ் போட்டு வருகின்றனர். 

 

தொடர்புடைய இணைப்புகள்

இணையத்தில் கலக்கும் திருநெல்வேலி Deputy Commissioner அர்ஜுன் சரவணன் | tirunelveli deputy commissioner arjun saravavan reply to a netizen goes viral

People looking for online information on Deputy Commissioner Arjun Saravanan, Ilayaraja, Vadivelu will find this news story useful.