Beast Others
www.garudabazaar.com

கமல் - VJS - ஃபகத் பாசில்.. மூனு பேரும் 3 ரகம்.. 'விக்ரம்'.. கொல மாஸான புது போஸ்டர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் “விக்ரம்” படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகிறது.

Dauntless Ruthless fearless Kamals Vikram viral motion poster

நான்காண்டுகளுக்குப் பிறகு கமல் படம்…

விஸ்வரூபம் 2 படத்துக்குப் பிறகு கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக உள்ள படமாக "விக்ரம்" உருவாகி வருகிறது. இந்த படத்தை மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர்.

கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார். கமல் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானியும், மைனா நந்தினியும் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு 'ஜல்லிக்கட்டு' படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ISC ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார். விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Dauntless Ruthless fearless Kamals Vikram viral motion poster

தயாரிப்பு…

விக்ரம் படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. ஏற்கனவே படத்தின் முதல் லுக் போஸ்டர், முன்னோட்ட வீடியோ மற்றும் மேக்கிங் வீடியோ ஆகியவை வெளியாகி  ரசிகர்களையும் கவர்ந்தன. கடந்த சில மாதங்களாக நடந்து வந்த  'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. ’விக்ரம்’ படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய படமாக BIGGEST ACTION ENTERTAINER என்ற அடைமொழியுடன் ஜூன்-3 அன்று வெளியாகிறது.

Dauntless Ruthless fearless Kamals Vikram viral motion poster

உதயநிதியோடு கூட்டணி…

இந்நிலையில் விக்ரம் படத்தின் ஒட்டு மொத்த தமிழக வினியோகஸ்த உரிமையையும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. வரிசையாக பீஸ்ட், காத்து வாக்குல ரெண்டு காதல், டான் என முன்னணி நடிகர்களின் படங்களை ரெட்ஜெயிண்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் விக்ரம் திரைப்படமும் இணைந்துள்ளது.

Dauntless Ruthless fearless Kamals Vikram viral motion poster

வெளியான கதாபாத்திர அறிமுகம்…

விக்ரம் திரைப்படம் வெளியாக இன்னும் 50 நாட்கள் உள்ள நிலையில் தற்போது படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கும் கமல், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகியோர்களின் கதாபாத்திரங்கள் பற்றிய அறிமுக வீடியோ கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது. கமல்ஹாசனின் பாத்திரம் Fealess ஆகவும், விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் Ruthless ஆகவும், பஹத் பாசிலின் கதாபாத்திரம் Dauntless ஆகவும் இருக்கும் ஒரு அறிமுகத்தைக் கொடுத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் இப்போது வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Dauntless Ruthless fearless Kamals Vikram viral motion poster

People looking for online information on Lokesh Kanagaraj, Vijay Sethupathi, Vikram will find this news story useful.