Beast Intro April 13
Beast Others
www.garudabazaar.com

அருண் விஜய் - ஹரி இணையும் ‘யானை’.. தள்ளிப்போன பட ரிலீஸ்.. வெளியான புதிய தேதி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அருண் விஜய் - ஹரி இணையும் யானை படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Arun Vijay Hari Yaanai Movie New Release Date Announced

போடு வெடிய..KGF Chapter 2 பாக்ஸ் ஆபிஸில் ரெக்கார்ட் பிரேக்கிங் சாதனை..! வெளியான OFFICIAL தகவல்

நடிகர் அருண் விஜய், தனது மாமாவான இயக்குநர் ஹரி கூட்டணியில்  “யானை” திரைப்படம் முழு படப்பிடிப்பு பணிகளும் முடிந்தது.  இப்படத்திற்காக  இராமேஸ்வரம், தூத்துகுடி, காரைக்குடி, பழனி மற்றும் சென்னையில்  படப்பிடிப்பு நடந்து முடிந்தது.

இந்த படத்தில் அருண்விஜய் உடன், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், கருடா ராம், புகழ், தலைவாசல்விஜய், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி, ஐஸ்வர்யா, போஸ் வெங்கட், ஜெயபாலன் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Arun Vijay Hari Yaanai Movie New Release Date Announced

நடிகர் அருண் விஜய் இதுவரை ஏற்றிராத வேடத்தில் நடித்துள்ளார். கிராமம் மற்றும் நகர பின்னணியில் தன் வழக்கமான பரபர திரைக்கதையுடன்  இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஹரி. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார்.

யானை படத்தின் தமிழக தியேட்டர் ரிலீஸ் உரிமையை KKR சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.  இந்த யானை படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் OTT டிஜிட்டல் உரிமையை ஜி குரூப் கைப்பற்றி உள்ளது. ZEE5 OTT & ZEE தமிழ் தொலைக்காட்சிகளில் இந்த படம் வரும் நாட்களில் ஒளிபரப்பாகும்.

இது அருண் விஜய் நடிக்கும் 33வது படமாகும்.  இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் செப்டம்பர் 9ஆம் தேதி விநாயகர் சதூர்த்திக்கு வெளியானது. மேலும் போஸ்டர்கள், சிங்கிள் பாடல் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றன.

Arun Vijay Hari Yaanai Movie New Release Date Announced

படத்தின் வெளியீட்டுக்கான அனைத்து பணிகளும் முடிக்கப்பட்ட நிலையில் இந்த திரைப்படம் வரும் மே மாதம் 6-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இச்சூழலில் யானை படம் வினியோகஸ்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த படம் ஜூன் மாதம் 17 ஆம் தேதிக்கு ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Arun Vijay Hari Yaanai Movie New Release Date Announced

இதனை படக்குழு புதிய போஸ்டரின் மூலம் அறிவித்துள்ளனர்.

நயன்தாரா - சமந்தாவின் கலக்கலான DANCE.. "காத்துவாக்குல ரெண்டு காதல்" பாடலின் கலர்ஃபுல்லான GLIMPSE VIDEO!

தொடர்புடைய இணைப்புகள்

Arun Vijay Hari Yaanai Movie New Release Date Announced

People looking for online information on Arun Vijay, Director Hari, Yaanai movie, Yaanai Movie Release Date will find this news story useful.