www.garudabazaar.com

"காதல் கோட்டை சூர்யாக்கள் ..".. CWC கனியின் கணவரான இயக்குநரின் நெகிழவைக்கும் பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நான் சிகப்பு மனிதன், தீராத விளையாட்டு பிள்ளை, சமர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் திரு.

CWC Kani husband director thiru related Ajith kathal kottai

இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிற ஒரு பதிவு நெகிழ வைத்திருக்கிறது. அதில் திரு, தனது பர்சை தொலைத்து, இரண்டு வாரத்துக்கு பிறகு பர்ஸில் இருந்த பான் கார்டு, ஏடிஎம் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் மற்றும் ஆதார் கார்டு உள்ளிட்ட அனைத்தையும் எவரோ முன் பின் அறியாத நபர் ஒருவர் அனுப்பி வைத்திருக்கிறார் என்பதை புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். தமது அந்த பதிவில், “தேடி அலஞ்சு இனிமே கிடைக்க வாய்ப்பே இல்லனு சோர்ந்து உக்காரும் போது உங்களுக்கு ஏதாவது கிடைச்சிருக்கா.. எனக்கு கெடச்சுது.. Yes என்னோட Waller, After 2 weeks.. காதல் கோட்டை சூர்யாக்கள் நிஜத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள் .. Thank you Mr G.Mohan #Humanity #மனிதம்” என பதிவிட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமாக அறியப்பட்டவர் கனி.  இந்த நிகழ்ச்சியின் 2து சீசனில் டைட்டில் வென்றதும் கனிதான். இவரது கணவர் தான் திரு. 

கனியின் தந்தை காதல் கோட்டை திரைப்படத்தை இயக்கிய அகத்தியன் என்பதும் அந்த திரைப்படத்தின் கதையை தொடர்பு படுத்தி தனக்கு நடந்த இந்த நெகிழ்ச்சி சம்பவத்தை திரு பதிவிட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் காதல்கோட்டை படத்தில் அஜித் பெயர் சூர்யா என்பதால் தான் காதல் கோட்டை சூர்யாக்கள் நிஜத்திலும் இருக்கிறார்கள் என்று திரு குறிப்பிட்டு இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

ALSO READ: "குடும்பத்துல ஒருத்தர் மாதிரி நடத்தினார்!".. இயக்குநர் மறைவு.. ரம்யா பாண்டியன் உருக்கம்! 

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

CWC Kani husband director thiru related Ajith kathal kottai

People looking for online information on Ajith Kumar, CookWithComali, Kani, KathalKottai, ThalaAjith, Thiru will find this news story useful.