COBRA D Logo Top
www.garudabazaar.com

CWC ‘அம்மு’ அபிராமி நடிக்கும் “பெண்டுலம்” ஃபேண்டஸி திரில்லர் படம் - இயக்குநர் இவரா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

SURYA INDRAJIT FILMS  சார்பில் திரவியம் பாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் B.சதீஸ் குமரன் இயக்கத்தில், அம்மு அபிராமி, கோமல் ஷர்மா நடிக்கும், புதுமையான சைக்கலாஜிகல் ஃபேண்டஸி திரில்லர் திரைப்படமான “பெண்டுலம்” படத்தின் படப்பிடிப்பு, எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது.

CWC Ammu Abirami starring Pendulum psychological fantasy thriller

Also Read | விக்ரமன் மகனை பாத்துருக்கீங்களா? Hitlist படத்தில் ஹீரோவாகிறார்.! தயாரிக்கும் KS ரவிகுமார்.

தமிழ் சினிமாவில் சைக்கலாஜிகல் படங்கள் அரிது அந்த வகையில் தமிழ் சினிமாவில் இதுவரையிலும் சொல்லப்படாத புதுமையான திரைக்கதையில், சைக்கலாஜிகல் ஃபேண்டஸி திரில்லர் திரைப்படமாக “பெண்டுலம்” படம் உருவாகிறது. சைமன் கிங் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆனந்த் ஒளிப்பதிவு செய்ய, ராம் சதீஷ் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.

CWC Ammu Abirami starring Pendulum psychological fantasy thriller

மேலும் இப்படத்தில் ஶ்ரீபதி, ஶ்ரீகுமார்,T.S.K, விஜித்,FIR ராம்,  ராம் ஜூனியர் எம் ஜி ஆர் , பிரேம் குமார், கஜராஜ், சாம்ஸ் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். முதல்முறையாக எட்டு கதாப்பாத்திரங்கள் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் புதுமையான திரைக்கதையில் ஒரு விறுவிறுப்பான திரில்லராக இப்படம் உருவாகிறது.  

CWC Ammu Abirami starring Pendulum psychological fantasy thriller

20 ஆண்டுகளாக கேமரா பின்னணியிலும், ஒளிப்பதிவாளராக பல உலக விருதுகளை குவித்திட்ட குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் பணிபுரிந்திட்ட B.சதீஸ் குமரன் இப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் இயக்குநர் ஷங்கரின் “ஐ” படத்தில் மேக்கிங் கேமராமேனாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடதக்கது. சென்னை, தலக்கோணம், ஆந்திரா கர்னூல் மாவட்டம் மற்றும் கோவா முதலாக இதுவரை படப்பிடிப்பு நடத்தப்படாத இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

CWC Ammu Abirami starring Pendulum psychological fantasy thriller

Also Read | யோகிபாபு நடிக்கும் புதிய ஃபேன்டஸி திரைப்படம் "யானை முகத்தான்" - ஒன்லைன் இதுதான்.!

தொடர்புடைய இணைப்புகள்

CWC Ammu Abirami starring Pendulum psychological fantasy thriller

People looking for online information on Cook with comali, CWC Ammu Abirami, Pendulum will find this news story useful.