COBRA D Logo Top
www.garudabazaar.com

விக்ரமன் மகனை பாத்துருக்கீங்களா? Hitlist படத்தில் ஹீரோவாகிறார்.! தயாரிக்கும் KS ரவிகுமார்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் தெனாலி, கூகுள் குட்டப்பா படங்களுக்கு பிறகு,  அவருடைய RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகிறது “ஹிட்லிஸ்ட்” திரைப்படம்.

Director Vikraman Son debute acting Hitlist movie

Also Read | கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' படத்தை 48 முறை தியேட்டரில் மட்டும் பார்த்த வெறித்தனமான ரசிகர்!

இப்படத்தில் மூத்த இயக்குநர் விக்ரமனின் மகன் நடிகராக அறிமுகமாகிறார். நடிகர் சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரம் ஏற்றிருக்கும் இப்படத்தின் அறிமுக விழா மற்றும் பூஜை, எண்ணற்ற  திரைப்பிரபலங்கள், படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை நண்பர்கள் முன்னிலையில் கோலகலமாக நடைபெற்றது. தமிழ் சினிமாவில் புது வசந்தம் படம் மூலம் பயணத்தை தொடங்கிய இயக்குநர் விக்ரமன், பல புதிய இளம் இயக்குநர்கள் உருவாக காரணாமாக இருந்தவர்.

Director Vikraman Son debute acting Hitlist movie

இந்நிலையில்தான் இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா திரையுலகில் நடிகராக அறிமுகமாகிறார். கமர்ஷியல் - ஆக்சன் திரைப்படமாக உருவாகும் இப்படத்தினை, கமர்ஷியல் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் RK Celluloids நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இயக்குநர்கள் சூர்யகதிர், கார்த்திகேயன் இணைந்து இயக்குகிறார்கள்.

Director Vikraman Son debute acting Hitlist movie

இப்படத்தின் பூஜையில் திரை பிரபலங்கள் RB சௌத்திரி, சத்யஜோதி தியாகராஜன், PL தேனப்பன் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் எழில்  கே.எஸ்.ரவிக்குமார், விக்ரமன், எஸ் ஏ சந்திரசேகர், மனோபாலா, லிங்குசாமி, ஏ ஆர் முருகதாஸ், சீனு ராமசாமி, சசி,  பிரபு சாலமன், பாண்டியராஜன், ஆர் கண்ணன், சரண், ரமேஷ் கண்ணா,  பேரரசு, ராஜகுமாரன், தேவயானி, ஜெயப்பிரகாஷ்  உட்பட பலர் கலந்துகொண்டு, நடிகர் விஜய் கனிஷ்காவை வாழ்த்தியதுடன்,  படம் வெற்றிபெற  படக்குழுவினரை வாழ்த்தினர்.

Director Vikraman Son debute acting Hitlist movie

இப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் ஜனரஞ்சகமாக, காமெடி ஆக்சன் கமர்ஷியல் என  அனைத்து அம்சங்களும் நிறைந்த திரைப்படமாக உருவாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. படம் குறித்த  மற்ற விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

Also Read | Trailer அப்டேட் வந்த சில நாளில்.. பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட அடுத்த 'அதிரடி' தகவல்!!

Director Vikraman Son debute acting Hitlist movie

People looking for online information on Director Vikraman Son, Hitlist movie Launch, Vijay Kanishka will find this news story useful.