சூர்யாவின் இந்த ரொமான்டிக் பாட்டு தான் பிரபல இந்திய கிரிக்கெட் வீரருக்கு ஃபேவரைட்டாம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா, சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக நீண்டகாலமாக விளையாடி வருகிறார். தல தோனிக்கு பிறகு தமிழக ரசிகர்களால் மனம் கவர்ந்த வீரராக அறியப்படும் அவர் ரசிகர்களால் சின்னத் தல என்று அழைக்கப்படுகிறார்.

அதன் ஒரு பகுதியாக தனது இன்ஸஸ்டாகிராம் பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சூர்யா, ஜோதிகா இணைந்து நடித்திருந்த 'சில்லுனு ஒரு காதல்' பாடலான முன்பே வா பாடலை டிவியில் பார்த்துக்கொண்டிருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார்.

கடந்த வருடம் ஏற்கனவே முன்பே வா பாடலை ரெய்னா பாட, அந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்க்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது. மேலும் தனக்கு பிடித்த தமிழ் நடிகர் சூர்யா என்பதை பல்வேறு பேட்டிகளில் ரெய்னா பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Entertainment sub editor