www.garudabazaar.com

Rithika: ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ‘மாஸ்’ காட்டிய CWC ரித்திகா!! என்ன செஞ்சிருக்காங்க பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ரித்திகா விஜய் டிவி தொலைக்காட்சிகளில் சீரியல் நடிகையாக இருந்து, பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளின் மூலம் இன்னும் தமிழ் நெஞ்சங்களின் மனதில் நேரடியாக இடம் பிடித்தவர், தடம் பதித்தவர்.

cook with comali Rithika sings in own voice baakiyalakshmi

சீரியலில் நடிப்பதை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசனில் பங்குபெற்றவர் ரித்திகா. KPY பாலாவின் காமெடி கவுண்டர்களுக்கு ஸ்பாட்டிலேயே பதில் கவுண்டர்கள் கொடுக்கும் ரித்திகாவின் க்யூட்னஸ் அனைவருக்குமே பிடித்துவிட்டது.

ஆம், பாலாவுக்கு ரித்திகா கொடுக்கும் ரிவர்ட் கவுண்டர்கள் மிகவும் பிரபலம். பாலாவின் ரைமிங் கவுண்டர்களுக்கு அந்த இடத்திலேயே டைமிங் கவுண்டர்களை திருப்பி அடிக்கும் ரித்திகாவின் பஞ்ச் எல்லாம் வேற லெவலில் இருக்கும். இந்த நிலையில்தான் பேசுவது, நடிப்பது மட்டுமில்லாமல் பாடவும் செய்திருக்கிறார் ரித்திகா.

ஆம், தான் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் விஜய் டிவி சீரியலில் பாடுவது போன்று அமைக்கப்பட்ட காட்சியில், தான் பாட வேண்டிய பாடலை தன் சொந்த குரலில் பாடி அசத்தியிருக்கிறார் ரித்திகா. அவருடைய ரசிகர்கள் மத்தியில் ரித்திகாவின் இந்த செயல் ட்ரெண்டாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார் ரித்திகா. இந்த சீரியலில் ஆகஸ்டு 2, 2021 அன்று ஒளிபரப்பான எபிசோடில், ரித்திகா கோயிலில் அமர்ந்து ‘குறை ஒன்றும் இல்லை’ பாடல் பாடுவது போன்ற ஒரு காட்சி வருகிறது. இதில், “குறை ஒன்றும் இல்லை.. மறைமூர்த்தி கண்ணா!” என்கிற பாடலை ரித்திகா, பக்தி சொட்டச் சொட்ட உருக்கமாக பாடுவதை காண முடியும்.

தவிர விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘காமெடி ராஜா கலக்கல் ராணி’ நிகழ்ச்சியில், அண்மையில் பாலாவுடன் இணைந்து பல க்ரியேட்டிவ் யோசனைகளுடன் தமது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார் ரித்திகா.

அந்த வகையில் கோவை சரளா போல் வேடமிட்டு பாலாவுடன் இணைந்து ரித்திகா நடித்த குறிப்பிட்ட அந்த காமெடி எபிசோடுக்கு அதிக பாசிடிவ் வரவேற்பு இருந்தது. 

அதற்கு முக்கிய காரணம் ரித்திகாவின் நடிப்பு தான். நடிப்பு என்று வந்துவிட்டால் அதில் 100 சதவீதம் அர்ப்பணிப்புடனும், காட்சிக்கான சின்சியாரிட்டியுடனும் ரித்திகா தன் உழைப்பைக் கொடுக்கிறார் என்று, இந்த காட்சிக்கு பின்னர் பலரும் ரித்திகாவை புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.

ALSO READ: கொந்தளித்த Yashika.. "Delivery Boy மரணத்துக்கு நான் காரணமா?".. "ஒவ்வொரு நொடியும்".. உருக்கமான பதிவு!

தொடர்புடைய இணைப்புகள்

cook with comali Rithika sings in own voice baakiyalakshmi

People looking for online information on Baakiyalakshmi, CookWithComali2, Rithika, TVActress, TVSerial, TVShow, VijayTelevision, Vijaytv will find this news story useful.