Reliable Software
www.garudabazaar.com

Video: 'உண்மையிலயே பட்டாஸ் தான்!'.. குக் வித் கோமாளி அஷ்வின் நடித்த மியூசிக்கல் வீடியோ ஆல்பம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குக் வித் கோமாளி அஷ்வின் நடிப்பில் உருவாகியுள்ள குட்டி பட்டாஸ் என்கிற மியூசிக்கல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Cook With Comali Ashwin Kutty Pattas Musical Video

சோனி மியூசிக் என்டர்டெயின்மென்ட் மற்றும் தி ரூட் - நாய்ஸ் அண்ட் க்ரெய்ன்ஸ் இணைந்து வெளியிட்டுள்ள இந்த ‘குட்டி பட்டாஸ்’ வீடியோ கலர்ஃபுல்லான பீட் மோடில் பட்டையை கிளப்புகிறது. இதில் குக் வித் கோமாளி மூலம் புகழ் பெற்ற அஷ்வின் குமாரும், பிகில் திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்ற ரெபா மோனிகா ஜானும் இணைந்து இந்த மியூசிக்கல் வீடியோவில் கலக்கியுள்ளனர்.

சந்தோஷ் தயாநிதி இசையில் உருவாகியிருக்கும் இந்த தனி மியூசிக் ஆல்பம் பாடலின் ப்ரோமோ ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே பிரபலமாகி ஒரே நாளில் 30 லட்சம் பார்வைகளை பெற்று ட்ரெண்டிங் ஆனது. சாண்டி மாஸ்டரின் நடனத்தில் உருவாகியுள்ள இந்த பாடலோடு சேர்ந்து இளைஞர்கள் தானாகவே ஆடத் தொடங்கிவிடுவர். இந்த பாடலை வெங்கி இயக்கியுள்ளார்.  

ALSO READ: 'RRR' படத்தில் பிரபல ஹீரோவின் கேரக்டர் இதுதான்!.. ராஜமௌலி வெளியிட்ட பிரம்மாண்ட போஸ்டர்!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Cook With Comali Ashwin Kutty Pattas Musical Video

People looking for online information on Ashwin, Ashwin Kumar, KuttyPattas, Reba Monica John will find this news story useful.