www.garudabazaar.com

இந்த லாக்டவுனில் நடிகர் சிம்பு - திரிஷா கல்யாணம்..?! - விவரம் என்ன தெரியுமா.?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிம்புவின் திருமணம் பற்றி மீண்டும் பல செய்திகள் வைரலாக சென்று கொண்டிருக்கின்றன. 

சிம்பு - திரிஷா திருமண விவகாரம் உண்மையா | Clarification on news of Simbu Trisha marriage during lockdown

தமிழ் சினிமாவில் சிறுவயது முதலே நடித்து, தற்போது முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் இவருடன் எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். மேலும் ஹன்சிகா நடிக்கும் மகா படத்திலும் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். 

சிம்பு - திரிஷா திருமண விவகாரம் உண்மையா | Clarification on news of Simbu Trisha marriage during lockdown

இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு அவரது வீட்டில் தீவிரமாக பெண் தேடி வருவதாக அண்மையில் இணையத்தில் செய்திகள் கிளம்பின. இதையடுத்து டி.ராஜேந்திரன் தரப்பில் இருந்து அது பொய் என தெரிவிக்கப்பட்டது. 

இதனிடையே தற்போது சிம்புவுக்கும் திரிஷாவுக்கு திருமணம் நடக்கவுள்ளதாக கிளம்பிய செய்தி வைரலாக சென்றது. இவர்களின் திருமனம் இந்த லாக்டவுனில், சிம்பிளாக நடக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து நடிகரின் நெருங்கிய வட்டாங்களில் இதுபற்றி விவாரித்த போது, ''சிம்பு - திரிஷா பற்றி வரும் செய்திகள் முற்றிலும் தவறான செய்திகள். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்'' என தெரிவிக்கின்றனர். இதையடுத்து சிம்பு - திரிஷா பற்றி பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

 

சிம்பு - திரிஷா திருமண விவகாரம் உண்மையா | Clarification on news of Simbu Trisha marriage during lockdown

People looking for online information on Maanaadu, Simbu, Simbu Trisha Marriage, Str, Trisha will find this news story useful.