Kaateri logo top
www.garudabazaar.com

தங்கம் வென்ற மீரா பாய் சானு.. நெட்டிசன் போட்ட கமெண்ட்.. ஹாலிவுட் நடிகர் கொடுத்த மாஸ் ரிப்ளை..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற மீரா பாய் சானுவை பிரபல ஹாலிவுட் நடிகரான கிரிஸ் ஹெம்ஸ்வொர்த் பாராட்டியுள்ளார். இந்த ட்வீட் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Chris Hemsworth reply for Mirabai after fan Command

காமன்வெல்த் போட்டிகள் 

காமென்வெல்த் உறுப்பு நாடுகள் பங்கேற்கும் காமென்வெல்த் போட்டிகள் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இதில் 72 நாடுகள் பங்கேற்றுள்ளன. இதில் தடகளம், பேட்மின்டன், ஹாக்கி, குத்துச்சண்டை, பளு தூக்குதல், கிரிக்கெட் உள்ளிட்ட 19 போட்டிகளும், 8 பாரா விளையாட்டுகளும் இடம்பெற்றிருக்கின்றன. சுமார் 6,500 வீரர்கள் மற்றும் குழு நிர்வாகிகள் கலந்துகொண்ட இந்த ஆண்டின் காமன்வெல்த் போட்டிகள் பெர்மிங்காமில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி துவங்கியது.

Chris Hemsworth reply for Mirabai after fan Command

மீராபாய் சானு

இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த பளுதூக்கும் வீராங்கனையான மீராபாய் சானு மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. கடந்த 31 ஆம் தேதி நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் 49 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் மீராபாய் சானு 201 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்தார். இங்கிலாந்தில் நடைபெறும் காமல்வெல்த் போட்டிகளில் இது இந்தியாவுக்கு முதல் தங்கமாகும். இதனையடுத்து அவருக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் சமூக வலை தளங்கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்துவந்தனர்.

கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ்-ல் தோர் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர். பிரம்மாண்ட சுத்தியலுடன் வலம்வரும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களும் உள்ளனர். அண்மையில் வெளியான தோர் : லவ் அண்ட் தண்டர் திரைப்படத்தில் கிறிஸ் நடித்திருந்தார். இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.

Chris Hemsworth reply for Mirabai after fan Command

இந்நிலையில், மீராபாய் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றதையடுத்து தனது பக்கத்தில் புகைப்படங்களை அவர் பதிவிட்டிருந்தார். அதில் சவுரப் சின்ஹா என்பவர்,"தோர் அவருடைய சுத்தியலை அளிக்கக்கூடிய நேரம் இது" என எழுதி கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்-ஐ டேக் செய்திருந்தார்.

இதனை தொடர்ந்து இந்த கமெண்டிற்கு கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் ரிப்ளை செய்திருக்கிறார். அதில்,"அவர் அதற்கு தகுதியானவர். வாழ்த்துக்கள் சாய்கோம். நீங்கள் ஒரு லெஜெண்ட்" என்று குறிப்பிட்டுளளார். இந்த ட்வீட் தற்போது வைரலாக பரவி வருகிறது.

 

Chris Hemsworth reply for Mirabai after fan Command

People looking for online information on கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், மீராபாய் சானு, Chris Hemsworth, CWG, Mirabai Chanu will find this news story useful.