IndParty
www.garudabazaar.com

"அடிச்சே சாவடிச்சிட்டான்"... கதறி அழுத நடிகை சித்ராவின் தாய்... வெளியான அதிர்ச்சி வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் இதற்கு முன்பு பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும், சீரியல்களிலும் நடித்து இருந்தார், இருந்தாலும் இந்த தொடர் மூலம் வேற லெவல் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இந்நிலையில் அவர் மரணமடைந்த செய்தி ரசிகர்களை மிகவும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அவருடைய பாசிட்டிவ் குணம் தான் ரசிகர்களின் பேவரைட்டாக இருந்தது.

chithra mother breaks badly on daughters death கதறி அழுத சித்ராவின் தாய்

இந்நிலையில் இந்த முடிவை சித்ராவிடம் இருந்து யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில் அவருடன் நடித்த நடிகர், நடிகைகளும், விஜய்டிவி பிரபலங்களும் தற்போது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை சித்ராவின் உடற்கூறு ஆய்வு ஆரம்பித்துள்ளது. மருத்துவர்கள் அவரது உடலை பரிசோதித்து வருகின்றனர். இந்த நிலையில் சித்ராவின் தாய் மற்றும் அவரது தந்தையின் மனதை உருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. சோகத்தில் அவரது தந்தை சவபெட்டியின் மீது படுத்து கொள்கிறார். அவரது தாய் கதறி அழும் பொழுது "அடிச்சே சாவடிச்சுட்டான். என் மகன் கோழையல்ல. அடிச்சே சாவடிச்சுட்டான்" என்று கதறி அழுவதைப் பார்க்க முடிகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

"அடிச்சே சாவடிச்சிட்டான்"... கதறி அழுத நடிகை சித்ராவின் தாய்... வெளியான அதிர்ச்சி வீடியோ..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

chithra mother breaks badly on daughters death கதறி அழுத சித்ராவின் தாய்

People looking for online information on Chithra, Pandiyan Stores will find this news story useful.