IndParty
www.garudabazaar.com

சித்ராவின் உடம்பில் இருந்த காயம்... தந்தை அளித்த போலீஸ் புகார்... "அதனால தான் ஓட்டலில் தங்கி.."

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் இதற்கு முன்பு பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும், சீரியல்களிலும் நடித்து இருந்தார், இருந்தாலும் இந்த தொடர் மூலம் வேற லெவல் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இந்நிலையில் அவர் மரணமடைந்த செய்தி ரசிகர்களை மிகவும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அவருடைய பாசிட்டிவ் குணம் தான் ரசிகர்களின் பேவரைட்டாக இருந்தது.

actress chithra father files case about her demise

இந்நிலையில் இந்த முடிவை சித்ராவிடம் இருந்து யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில் அவருடன் நடித்த நடிகர், நடிகைகளும், விஜய்டிவி பிரபலங்களும் தற்போது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சித்ராவின் தந்தை தற்போது போலீசில் புகார் அளித்துள்ளார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் மகளின் முகத்தில் இருந்த காயம் தூக்கு போட்டதால் ஏற்பட்டது என்றும் அவர் மரணத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் இரண்டு மாதங்களுக்கு முன்பு அவருக்கும் ஹேமந்த்க்கும் ரிஜிஸ்டர் திருமணம் நடைபெற்றதாகவும், பெரியவர்களால் பிப்ரவரி மாதத்தில் திருமணம் செய்ய இருந்ததாகவும் நேற்று இரவு நீண்ட நேரம் ஆகி விட்டதாலும், மழை காரணமாக அவர் ஹோட்டலில் தங்கியதாகவும், யார் மீதும் சந்தேகம் இல்லை போலீஸ்தான் அதை விசாரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

சித்ராவின் உடம்பில் இருந்த காயம்... தந்தை அளித்த போலீஸ் புகார்... "அதனால தான் ஓட்டலில் தங்கி.." வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

actress chithra father files case about her demise

People looking for online information on Chithra, Pandiyan Stores will find this news story useful.