மெகாஸ்டார் சிரஞ்சீவியின் Multi starrer "சைரா நரசிம்மா ரெட்டி" ட்ரெய்லர் இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 18, 2019 05:20 PM
சிரஞ்சீவி, நயன்தாரா, விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், தமன்னா ஆகியோர் நடிக்கும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா, தனது தந்தை சிரஞ்சீவி நடிப்பில், மிகுந்த பொருட்செலவில் ‘சைரா நரசிம்மஹ ரெட்டி’என்ற படத்தை தயாரித்து வருகிறார். சுரேந்தர் ரெட்டி இயக்கி வரும் இந்த படம் தெலுங்கு, தமிழில் நேரடியாகவும், இந்தியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வரவுள்ளது
மெகாபட்ஜெட்டில் பல நாட்களாக எடுக்கப்பட்டு வரும் இப்படத்தை சிரஞ்சீவியின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த படத்தில் எந்த படத்திலும் இல்லாத அளவிற்கு பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.
பாலிவுட் அமிதாப் பச்சன், கன்னட நடிகர் சுதீப், தமிழ் நடிகர் விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு முக்கிய கதாநாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாரா மற்றும் தமன்னா ஆகியோர் நடித்துள்ளனர் என்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
மெகாஸ்டார் சிரஞ்சீவியின் MULTI STARRER "சைரா நரசிம்மா ரெட்டி" ட்ரெய்லர் இதோ! வீடியோ