IndParty
www.garudabazaar.com

Video: இனிமே 'பேச' மாட்டேன்னு சொல்லிட்டா... பெரிய 'பாஸிடம்' புலம்பிய பாலாஜி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயந்திர மனிதா டாஸ்க் நேற்றும் தொடர்ந்தது. பாலாஜி அண்ட் கோ அர்ச்சனா அணியினரை வைத்து செய்து கொண்டிருந்தனர். இரவு வரையில் இது நீண்டது. கடைசியாக பிக்பாஸ் பெல்லடித்து போய் தூங்குங்க என லைட் ஆப் செய்தார். தொடர்ந்து காலையில் இந்த டாஸ்க் மறுபடி தொடர்ந்தது. சோமை வைத்து பாலாஜி, ஷிவானியை விதவிதமாக கிண்டலடித்து கொண்டிருந்தார்.

'Can't Help it' Balaji Murugadoss talks to Bigg Boss

முடிவில் ஷிவானியின் இரண்டு ஹார்ட்டுகளும் பறிபோயின. வெற்றியை ஷிவானியை அழைத்துக்கொண்டு சென்று பிக்பாஸிடம் பாலாஜி தெரிவித்தார். ஆனால் விஷயம் அத்துடன் முடியவில்லை. குண்டு ரோபோ என தன்னை பாலா கிண்டலடித்ததால், ஷிவானி இனி பேச மாட்டேன் என சொல்லி விட்டாராம். இதைத்தாங்க முடியாத பாலாஜி தனிமையில் அமர்ந்து பிக்பாஸிடம் புலம்பினார்.

நீங்க வேடிக்கையா டாஸ்க் கொடுத்தாலும் அது கடைசில இந்த எடத்துல தான் வந்து முடியுது. நான் என்ன பண்ண. என்னால ஹெல்ப் பண்ண முடியல என பிக்பாஸிடம் புலம்பினார். அது போதாதென அந்த வழியாக வந்த ரியோவை அழைத்து அவரிடமும் ஷிவானி பேச மாட்டேன் என சொல்லி விட்டதாக புலம்பினார். பாலா புலம்பிய இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்கள் அழகு பார்த்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

'Can't Help it' Balaji Murugadoss talks to Bigg Boss

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.