www.garudabazaar.com

“தீ தீ தளபதி”.. 1st Time பரத்வாஜ் இசையில்.. வேற லெவல் ஆல்பம்.. கனடா விஜய் மக்கள் இயக்கம் வெறித்தனம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கனடா, 2022, ஜனவரி 29:- தளபதி விஜய்யின் தீவிர ரசிகர்களான கனடா விஜய் மக்கள் இயக்கத்தினர் தயாரித்து பணிபுரிந்துள்ள ‘தீ தீ தளபதி’ ஆல்பம் பாடல் தற்போது Behindwoods யூடியூப் தளத்தில் பிரத்தியேகமாக வெளியாகியுள்ளது. இந்த ஆல்பத்திற்கு நடிகர் அஜித் குமாரின் பல படங்களுக்கு இசையமைத்த முன்னணி இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.

Canada vijay makkal iyakkam Thalapathy tribute Bharadwaj music

நடிகர் விஜய்..

‘நாளைய தீர்ப்பு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனவர் நடிகர் விஜய். ஆரம்பத்தில், மெதுவாக தொடங்கிய விஜய்யின் திரைப் பயணம், 'பூவே உனக்காக' படத்திற்கு பிறகு, மிகப்பெரிய அளவில் அவரை பிரபலமாக்கியது.

Canada vijay makkal iyakkam Thalapathy Song Bharadwaj music

தளபதி விஜய்...

தொடர்ந்து பல படங்கள், விஜய் நடிப்பில் வெளியாகி ஹிட் அடிக்கவே, இளைஞர்களின் அன்புமிக்க நடிகரானார் இளைய தளபதி. தமிழகத்தை மட்டுமல்லாமல், மொழி, நாடு எல்லைகள் கடந்து உலக அளவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தையும் விஜய் உருவாக்கினார். பின்னர் தளபதி விஜய்யாக மலர்ந்தார்.

மாஸ்டர் ஹிட்டை தொடர்ந்து பீஸ்ட்..

Canada vijay makkal iyakkam Thalapathy Song Bharadwaj music

ட்விட்டரில் ஆண்டுதோறும் விஜய் திரைப்படம் தொடர்பான ஹேஸ்டேக்குகள் தான் அதிக அளவில் டிரெண்ட் ஆகும். அந்த அளவுக்கு விஜய்யின் ரசிகர்கள், மிகப் பெரிய அளவில் இருக்கின்றனர். விஜய்யின் நடிப்பில் கடந்த வருடம் 'மாஸ்டர்' திரைப்படம் வெளியாகி, பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதனைத் தொடர்ந்து, நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' திரைப்படம், இந்தாண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Also Read: 'ஏன் இப்படி பண்றீங்க'.. hatres குறித்து அர்ச்சனா மகள் சாரா.. DD-யின் மாஸ் அட்வைஸ்! சிங்கப் பொண்ணுப்பா!

அதன் பின்னர், தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி 66 திரைப்படத்தில் நடிக்க தளபதி விஜய் ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இந்த ஆண்டு தீபாவளி அல்லது அடுத்த பொங்கலுக்கு இந்த படம் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தீ தீ தளபதி..

இந்நிலையில், கனடாவில் உள்ள விஜய் ரசிகர்கள் அனைவரும் இணைந்து ஒரு சிறப்பான பாடலை விஜய்க்காக உருவாக்கியுள்ளனர். 'தீ தீ தளபதி' என பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஆல்பம் பாடலை, கனடாவிலுள்ள விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த விஜய் ரசிகர்கள், பாடவும், எழுதவும், தயாரிக்கவும் செய்துள்ளனர்.

Canada vijay makkal iyakkam Thalapathy Song Bharadwaj music

தல பட இசையமைப்பாளர் இப்போ தளபதிக்கும் இசைமைத்த நெகிழ்ச்சி தருணம்..

இந்த பாடலுக்கு பிரபல இசை அமைப்பாளர் பரத்வாஜ் இசை அமைத்துள்ளார். பரத்வாஜை இசை அமைக்க வைத்ததற்கான காரணம் பற்றி சொல்லும் கனடா விஜய் மக்கள் இயக்கத்தினர், “பொதுவாக நடிகரும் விஜய்யின் நண்பருமான அல்டிமேட் ஸ்டார் அஜித் படங்களுக்கு தான், பரத்வாஜ் அதிகம் இசையமைத்துள்ளார். விஜய் படங்களுக்கு இதுவரை பரத்வாஜ் இசையமைப்பாளராக பணிபுரிந்ததில்லை.

Canada vijay makkal iyakkam Thalapathy Song Bharadwaj music

இதனால், விஐய்க்கு பரத்வாஜ் இசையமைக்கும் முதல் பாடலாக இது இருக்க வேண்டும் என்பதற்காக தான் பரத்வாஜை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்தோம். இதற்காக அவரை அணுகிய போது,  ‘விஜய்க்காக நான் இதுவரை இசை அமைத்ததில்லை. நிச்சயமாக பண்ணலாம்பா’ என உடனடியாக ஒப்புக் கொண்டார்” என தெரிவித்துள்ளனர்.

தளபதி பாடலில் கனடா விஜய் மக்கள் இயக்கத்தினர்..

தொடர்ந்து, இந்த பாடலை கனடா மக்கள் இயக்கத்தின் செயலாளர் ஜனனி மற்றும் கனடா விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் கார்த்திக் பாடியுள்ளனர்.

Canada vijay makkal iyakkam Thalapathy tribute Bharadwaj music

தீ தீ தளபதி எனும் இந்த ஆல்பம் பாடலின் பாடல் வரிகளை கனடா விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் கார்த்திக் எழுதியுள்ளார். 

Canada vijay makkal iyakkam Thalapathy tribute Bharadwaj music

கனடாவின் Toronto-வில் உள்ள Exodus Studio Productions-ல் இந்த பாடல் ரெக்கார்டிங் பணிகளை  அந்தோணி மேற்கொள்ள, சிம்ப்சன், அருண் உலகா, கணேஷ் உள்ளிட்டோர் இசைக்கலைஞர்களாக பணிபுரிந்துள்ளன.

Also Read: “ஏது? யாஷிகாவ விவாகரத்து பண்ணேனா?”.. பிக்பாஸ் நிரூப்பிடம் நேரலையில் ரசிகர் கேள்வி.. நிரூப் சொன்ன காரணம்!

SFX, Sound Mixing பணிகளை A J டேனியல் கவனித்துக்கொள்ள, ஒளிப்பதிவு மற்றும் லிரிக் வீடியோ எடிட்டிங் பணிகளை இந்தியாவில் இருந்து சஞ்சய் சூர்யா கையாள, கனடாவில் ஒளிப்பதிவை Focus Creations மேற்கொண்டுள்ளது.

Canada vijay makkal iyakkam Thalapathy Song Bharadwaj music

இசையமைக்கும் பணி, மிக்சிங் மற்றும் மாஸ்டரிங் பணிகள் அனைத்தும் சென்னை டி.நகரில் உள்ள The B-Room இசைக்கூடத்தில் நடந்துள்ளன. கனடா விஜய் மக்கள் இயக்கத்தினர் தயாரித்து வழங்கியுள்ள இந்த ஆல்பம் பாடலின் புரொடக்‌ஷன் லைன் மேனேஜராக கனடா விஜய் மக்கள் இயக்கத்தின் துணை செயலாளர் பாலாஜி பெருமாள் பணிபுரிந்துள்ளார்.

Canada vijay makkal iyakkam Thalapathy Song Bharadwaj music

தீ.. தீ.. தளபதி.. பாடல் வெளீயீடு..

இப்படி முழுக்க முழுக்க விஜய் ரசிகர்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல், ஜனவரி 29-ஆம் தேதி பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் தளத்தில் பிரத்தியேகமாக வெளியாகியுள்ளது.

இந்த பாடல், நிச்சயம் அனைத்து விதமான ரசிகர்களுக்கும் பிடித்தமானதாகவும் உற்சாகமானதாகவும் இருக்கும் என கனடா விஜய் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அதே போல, தளபதி விஜய் குறித்த பாடல் என்பதால், மற்ற அனைத்து நாடுகளிலுள்ள அவரின் ரசிகர்களிடையேயும் இந்த பாடல் ஒரு புத்துணர்வையும் பரவசத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

“தீ தீ தளபதி”.. 1ST TIME பரத்வாஜ் இசையில்.. வேற லெவல் ஆல்பம்.. கனடா விஜய் மக்கள் இயக்கம் வெறித்தனம்! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

Canada vijay makkal iyakkam Thalapathy tribute Bharadwaj music

People looking for online information on Behindwoods Thalapathy Album Song, Behindwoods Vijay Song, Canada vijay makkal iyakkam, Thalapathy Album Song, Thalapathy Song, Thee Thee Thalapathy will find this news story useful.